எடை குறைப்பு ஊசிகளை நிறுத்திய பின்னும் உடல் மெலிந்த தோற்றத்தைப் பேண வேண்டுமா? இதோ ஒரு முக்கிய ரகசியம்! 💡🏃♂️
உடல் எடையைக் குறைக்கும் ஊசிகளைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பாக, அவற்றை நிறுத்திய பின்னரும் எடையை மீண்டும் அதிகரிக்காமல் பராமரிப்பதற்கான ஒரு முக்கிய ‘பொன்விதியை’ பொது மருத்துவர் (GP) ஒருவர் பகிர்ந்துள்ளார். GLP-1 வகையிலான உடல் எடை குறைப்பு மருந்துகளைப் பயன்படுத்தும் நோயாளிகளுடன் பணிபுரியும் மருத்துவர் அடம் ஸ்டேட்டன் (Dr Adam Staten) என்பவரே இதனைத் தெரிவித்துள்ளார்.
வெற்றிக் கதைகளும் மறுபக்கமும்! 📉📈
‘வன் டே டெஸ்ட்ஸ்’ (One Day Tests) நிறுவனத்தின் மருத்துவ இயக்குநராகவும் இருக்கும் மருத்துவர் அடம், இந்த மருந்துகளைப் பயன்படுத்தித் தங்களது வாழ்க்கையையே மாற்றியமைத்த பலரின் வெற்றிக் கதைகளைக் கண்டுள்ளார். அதேநேரம், இந்த மருந்துகளை நிறுத்திய பின்னர் மீண்டும் உடல் எடையை அதிகரித்துக் கொண்டவர்களையும் அவர் பார்த்துள்ளார்.
இந்த ஊசிகள் உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமன்றி, இதய நோய்கள், பக்கவாதம் (Strokes), நீரிழிவு நோய் (Diabetes) மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty liver disease) போன்ற ஆபத்துகளைக் குறைக்கவும் உதவுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனநிலை மாற்றம் மிக முக்கியம்! 🧠💪
இந்த ஊசிகளை நிறுத்த வேண்டிய காலம் வரும்போது, தங்களது எடையைத் தாங்களாகவே சுய முயற்சியில் பராமரிப்பதற்கு ஏற்ற சரியான மனநிலையை (Mindset) வளர்த்துக் கொள்ள, ஊசிகளைப் பயன்படுத்தத் தொடங்கும் முன்பே அனைவரும் செய்ய வேண்டிய ஒரு முக்கிய விடையத்தை அவர் விவரித்துள்ளார். மில்டன் கீன்ஸ் (Milton Keynes) பகுதியில் பணியாற்றும் மருத்துவர் அடம் குறிப்பிடுகையில், மக்கள் இந்த ஊசிகளை ஒரு ‘மாயாஜால அம்பு’ (Magic bullet) போலப் பார்ப்பதும், அதன் நீண்டகாலப் பலன்களைப் பற்றிச் சிந்திக்காமல் விடுவதுமே இந்தச் சிகிச்சை தோல்வியடைவதற்குக் காரணம் என்கிறார்.
நீங்களே உங்களைக் கேட்க வேண்டிய அந்த ஒரு கேள்வி! ❓🤔
ஊசிகளை ஆரம்பிக்கும் முன், ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: “இறுதியில் நான் எவ்வாறான ஒரு வாழ்க்கை முறையை (Lifestyle) வந்தடைய விரும்புகிறேன்?” மக்கள் தாங்கள் எங்கே போய் சேர வேண்டும் என்றவொரு தெளிவான கற்பனையைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அதற்கு என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர் அடம் கூறுகிறார்.
சுமையாகத் தெரியாத வாழ்க்கை முறை! 🍏🏃♂️
“தொடர்ந்து பின்பற்றுவதற்கு ஒரு சுமையாகத் தெரியாத, உங்களுக்குப் பிடித்தமான ஒரு வாழ்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது இதில் மிக முக்கியமானது,” என அவர் விளக்குகிறார். GLP-1 ஊசிகள் முதன்முதலில் சந்தைக்கு வந்தபோது, பெரும்பாலான மருத்துவர்கள் ஆரம்பத்தில் இது குறித்துச் சந்தேகமடைந்ததாகவும், உணவுப் பழக்கவழக்க மாற்றம் மற்றும் உடற்பயிற்சியை ஊக்குவிப்பதே சிறந்தது என நினைத்ததாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், இந்த ஊசிகள் மூலம் மக்கள் அடைந்த வியக்கத்தக்க எடை குறைப்பு முடிவுகளைக் கண்ட பின்னர் தனது எண்ணம் மாறியதாக மருத்துவர் அடம் தெரிவித்தார். ஆரம்பத்தில் எடையைக் குறைத்த பிறகு, அதனைத் தொடர்ந்தும் அப்படியே பேணுவதற்காக, நீண்ட காலத்திற்கு (அல்லது வாழ்நாள் முழுமைக்கும்) இந்த ஊசிகளின் மிகக் குறைந்த அளவை (Low dose) எடுக்கத் தீர்மானிப்பவர்களையும் நாம் இப்போது காண்கிறோம்.
மாயாஜால மருந்து அல்ல! 💰⚠️
ஆனால், இந்த ஊசிகளின் அதிக விலை காரணமாக, இது எல்லோராலும் சாத்தியமான ஒரு தெரிவாக இருக்காது. “இதனை ஒரு அதிசய மருந்து என்று நினைப்பதுதான் மக்கள் மத்தியில் இருக்கும் மிகப் பெரிய தவறான கருத்தாகும். இதனை எடுத்தால் எடை குறையும், அதன் பின்னர் நாம் வேறு எதுவும் செய்யத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.”
“ஆனால், குறைந்த எடையைத் தொடர்ந்தும் பராமரிப்பதற்குத் தாங்கள் என்னென்ன மாற்றங்களைச் செய்யப் போகிறோம் என்பதை மக்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.” உணவு முறை மாற்றங்களைப் பொறுத்தவரை, வெறும் கலோரிகளை (Calories) மட்டும் கணக்கிடுவதைத் தவிர்த்து, உணவின் தரத்திற்கு (Quality of nutrition) முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மக்களின் சிந்தனை இப்போது மாறியுள்ளதாக மருத்துவர் அடம் கூறுகிறார்.
கலோரிகள் சமன், ஆனால் சத்துக்கள்? 🥑🍔
உதாரணமாக, ஒரு ‘அவகாடோ ஒன் டோஸ்ட்’ (Avocado on toast) மற்றும் மெக்டொனால்ட்ஸ் (McDonald’s) உணவொன்றில் ஒரே அளவிலான கலோரிகள் இருந்தாலும், அவகாடோவின் ஊட்டச்சத்து நன்மைகள் அதனை மிகச் சிறந்தவொரு தெரிவாக மாற்றுகின்றன. அத்துடன், தங்களது எடை குறைப்புப் பயணத்தைச் சரியாகக் கொண்டு செல்ல மக்கள் புரதச்சத்து (Protein) நுகர்வை அதிகரிக்க வேண்டும். இதனை ஊசிகளை நிறுத்திய பின்னர் செய்யாமல், உடல் எடையைக் குறைக்கத் தொடங்கும் முதல் கணத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும், அப்போதுதான் அது நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கக்கூடியதாக இருக்கும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.
#tamilklik #tamil #tamilnews #srilanka #weightloss #health #healthylifestyle #wegovy #mounjaro #doctoradvice #fitness #nutrition #protein #avocado #healthcare #healthytips #obesity #medicalnews #gp #lifestylechange #slhealth #tamilhealth #healthyfood #diet #calories #fitnessgoals #wellbeing #healthawareness #weightlossjourney #wellness

