🇺🇸🇮🇷 ஈரானிடம் நஷ்டஈடு கேட்கும் டொனால்ட் ட்ரம்ப்… ஹோர்முஸ் நீரிணை மோதலில் புதிய அதிர்ச்சி நிபந்தனை! 🇺🇸🇮🇷

Trump demands Iran pay US for 'decades of attacks' in Hormuz standoff

🛡️ பற்றியொட் ஏவுகணைகளின் கையிருப்பு வீழ்ச்சி? போருக்கு மத்தியிலும் அமெரிக்காவில் வெடிக்கும் அரசியல் மோதல்! 🏛️ 🇺🇸🇮🇷

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் விதித்துள்ள நிபந்தனைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார். அத்துடன், கடந்த பல தசாப்தங்களாக ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்காவிற்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் புது நிபந்தனை விதித்துள்ளார்.

மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் மற்றும் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என ஈரான் கோரி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் தமது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

📌 “ஈரான் நஷ்டஈடு வழங்க வேண்டும்”

ஈரானிய ஆதரவுப் படைகளின் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் வீதிப் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு ஈரான் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

“கடந்த 50 ஆண்டுகளில் ஈரானால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி ஆர்ப்பாட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த ஐந்து மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேரின் குடும்பங்களுக்கும் ஈரான் நஷ்டஈடு வழங்க வேண்டும். எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் இந்த நிபந்தனையை உறுதியாகச் சேர்க்குமாறு எனது பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

💣 குடிநீர் விநியோக மையங்கள் மீது இணையத் தாக்குதல்

இதனிடையே, அமெரிக்காவின் 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக மையங்களைக் இலக்கு வைத்து ஈரான் ஆதரவு ஹேக்கர்கள் தீவிர இணையத் தாக்குதல்களை (Cyber Attacks) நடத்தியுள்ளதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மிச்சிகன், மின்னிசோட்டா, ஜோர்ஜியா, நியூ ஜெர்சி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நீர் விநியோக அமைப்புகளின் பம்புகள் மற்றும் அழுத்தக் கட்டுப்பாட்டு அமைப்புகளை ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளனர். ஜோர்ஜியாவில் நீர் அழுத்தம் திடீரெனக் குறைந்ததால், நீரைக் கொதிக்க வைத்துப் பயன்படுத்துமாறு அதிகாரிகளால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், குடிநீரின் தரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

📉 ஈரானில் பொருளாதார நெருக்கடி – அமெரிக்காவில் ஆயுதப் பற்றாக்குறை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் 6வது மாதத்தைத் தொட்டுள்ள நிலையில், ஈரானியப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஈரானின் வருடாந்த பணவீக்கம் 88.6 சதவீதமாக உயர்ந்துள்ளதோடு, மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அந்நாட்டு அரசு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, அமெரிக்க இராணுவத்திடம் உள்ள பற்றியொட் (Patriot) ஏவுகணைகளின் கையிருப்பு 65 சதவீதம் வரை சரிவடைந்துள்ளதாக இராணுவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும், ஆயுதப் பற்றாக்குறை இல்லை என்றும், உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த மோதலில் இதுவரை 17 அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், போருக்கான செலவினங்கள் குறித்து வெள்ளை மாளிகைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளன.

#BreakingNews #USNews #IranWar #DonaldTrump #StraitOfHormuz #CyberAttack #PatriotMissiles #MiddleEastCrisis #WorldNews #TamilKlik