🇺🇸 🇮🇷 “வெள்ளைக்கொடி ஏந்தி ஈரானை சரணடையச் சொல்லுங்கள்!” – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் Fox News நேர்காணலில் அதிரடி! ⚠️
ஹோர்முஸ் நீரினையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை சீரமைப்பது தொடர்பான ஒப்பந்த முயற்சிகளுக்கு குறுக்கே நின்றால், ஓமான் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Fox News ஊடகவியலாளர் ட்ரே யிங்ஸ்ட் (Trey Yingst) நடத்திய தொலைபேசி நேர்காணலின் போதே ட்ரம்ப் இந்த கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஈரானுடன் இணைந்து ஓமான் முன்னெடுத்து வரும் சமாந்தர பேச்சுவார்த்தைகள் குறித்து கேட்கப்பட்ட போது, “ஓமான் எங்களது திட்டங்களுக்கு குறுக்கே நின்றால், நாங்கள் அவர்கள் மீது குண்டுவீசி அழிப்போம்” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், ஈரான் உடனடியாக “வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்திலொரு பங்கு பயணிக்கும் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரினையை ஈரான் முடக்கியுள்ள நிலையில், கப்பல்கள் பயணிப்பதற்கான வரைபடம் குறித்து ஈரானும் ஓமானும் உடன்பாட்டை எட்டியுள்ளதாக டெஹ்ரான் அறிவித்த பின்னரே ட்ரம்பின் இந்த அச்சுறுத்தல் வெளியாகியுள்ளது.
🇮🇶 🇮🇷 ஈராக்கிய குர்திஸ்தானில் ட்ரோன் தாக்குதல்!
மத்திய கிழக்கில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக்கிய குர்திஸ்தான் பிராந்தியப் பிரதமரின் அலுவலகத்தைக் குறிவைத்து நேற்றிரவு ஈரான் இரண்டு ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரினை விவகாரத்தில் 60 நாட்கள் நடைமுறையிலிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அவகாசம் திங்கட்கிழமையுடன் முடிவடைந்துள்ள நிலையில், பிராந்தியத்தில் இராணுவ மோதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
🇵🇸 🇮🇱 🇺🇸 காசா அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் சூடான கருத்துக்கள்!
- ஜாரட் குஷ்னரின் பேச்சுவார்த்தை: அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளரும் ஜனாதிபதி ட்ரம்பின் மருமகனுமான ஜாரட் குஷ்னர் (Jared Kushner), எகிப்தில் ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யாவைச் சந்தித்த பின்னர், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்க ஆதரவுடனான 15 அம்ச அமைதித் திட்டத்தை நெதன்யாஹூ நிராகரித்துள்ள நிலையில், காசாவில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- இஸ்ரேலிய எம்.பி.யின் சர்ச்சை பேச்சு: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹூவின் கூட்டணியில் உள்ள தீவிரவாத வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், காசாவில் தினமும் இரவில் “30 முதல் 40 பேரைக் கொல்ல வேண்டும்” எனக் கூறிய கருத்துக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
🇮🇷 🇺🇸 ஈரானின் பரிசு அறிவிப்பும் அமெரிக்கப் படைகளின் நகர்வும்!
- அமெரிக்க சிப்பாய்களுக்குப் பரிசு: அமெரிக்க சிப்பாய்களைக் கொல்பவர்களுக்கு அல்லது சிறைபிடிப்பவர்களுக்கு $30,000 அமெரிக்க டொலர் மதிப்பிலான தொகையை பரிசாக வழங்குவதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது. பெண் ஒருவர் இத் தாக்குதலை நடத்தினால் அப்பரிசுத் தொகை இரட்டிப்பாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
- மத்திய கிழக்கில் அமெரிக்க கடற்படை: மத்திய கிழக்கிற்கான அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) தளபதி, பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள USS Lincoln விமானம் தாங்கிப் போர்க்கப்பலுக்கு விஜயம் செய்து மாலுமிகளின் சேவையைப் பாராட்டியுள்ளார்.
ஹோர்முஸ் நீரினையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா முயன்று வரும் நிலையில், பிராந்தியத்தில் நடுநிலை வகித்து வந்த ஓமான் மீது அமெரிக்கா விடுத்துள்ள இந்த நேரடி அச்சுறுத்தல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#MiddleEastNews #DonaldTrump #Oman #StraitOfHormuz #IranWar #GazaCeasefire #USNews #TamilKlik

