பத்தாவது ஆண்டில் புதியவாழ்வு நிறுவனம்.

NEWLIFE FOUNDATION

போர் மற்றும் பொருளாதார சவால்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உயரிய நோக்குடன், பல்வேறு சமூக நலத் திட்டங்கள், கல்வி உதவிகள், மருத்துவ உதவிகள் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்து வரும் புதிய வாழ்வு நிறுவனம் (New Life Foundation), தனது மனிதாபிமான சேவையின் 10வது ஆண்டை இவ்வருடம் பெருமையுடன் நிறைவு செய்கிறது.

வடக்கு மற்றும் கிழக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் தேவையுடைய குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டி, சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் பயணமும் பணிகளும் குறித்து, அதன் திட்ட இணைப்பாளர் திரு. வி. சு. விஜயலாதன் அவர்கள் வழங்கிய சிறப்பு செவ்வி இது. கடந்த பத்து ஆண்டுகால சேவைப் பயணம், மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள், சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பான அவரது கருத்துக்களை இதில் அறிந்து கொள்ளலாம்.

புதிய வாழ்வு நிறுவனத்தின் சேவைகள் மேலும் விரிவடைந்து, ஆதரவற்றோர், பாதிக்கப்பட்டோர் மற்றும் தேவையுடைய பலரின் வாழ்வில் நம்பிக்கையின் ஒளியை ஏற்றும் பணிகள் தொடர மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்கொடைகள், அனுசரணைகள் அல்லது பிற வழிகளின் மூலம் இந்த உன்னதமான மனிதாபிமானப் பணியில் உங்கள் பங்களிப்பும் இடம்பெற வேண்டும் என விரும்பினால், புதிய வாழ்வு நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு உங்கள் ஆதரவை வழங்கலாம். ஒரு சிறிய கரம் கூட, ஒருவரின் வாழ்வில் புதிய நம்பிக்கையை உருவாக்கும்.

https://www.newlifefoundationuk.com/