🇺🇸 ✈️ “மெக்சிட்” முடிவுக்கு முற்றுப்புள்ளி! – அமெரிக்காவை விட்டு வெளியேறும் ஹரி குடும்பத்திற்கு எழுந்த எதிர்ப்பு!🇬🇧 🇺🇸
அமெரிக்காவில் 6 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் மீண்டும் பிரித்தானியாவுக்குக் குடியேற இளவரசர் ஹரி (Prince Harry) மற்றும் மேகன் மார்க்கிள் (Meghan Markle) எடுத்த தீர்மானம், அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர்கள் (MAGA Supporters) இந்த முடிவை அரசியல் நோக்கத்துடன் விமர்சித்து வருகின்றனர்.
ஹரி – மேகன் தம்பதியினர் தங்களது பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் ஆகியோருடன் இங்கிலாந்திற்குத் திரும்பவுள்ள நிலையில், இது தொடர்பான கருத்துப் போர்கள் தீவிரமடைந்துள்ளன.
📌 MAGA ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு
வெள்ளை மாளிகையின் துணைத் தலைமை அதிகாரியின் மனைவியும் அரசியல் விமர்சகருமான கேட்டி மில்லர் (Katie Miller), “அதிபர் ட்ரம்ப்பை பிடிக்காத காரணத்தினாலேயே அவர்கள் மீண்டும் பிரித்தானியாவுக்குத் திரும்புகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வலதுசாரி ஊடகவியலாளர் மேகின் கெல்லி (Megyn Kelly) உட்படப் பல முக்கியப் புள்ளிங்கள், “அமெரிக்காவில் அவர்களின் காலம் முடிந்துவிட்டது” என X தளத்தில் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
⚠️ ட்ரம்ப் – ஹரி இடையிலான பழைய பிணக்குகள்
இளவரசர் ஹரிக்கும் அதிபர் ட்ரம்ப்பிற்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் புதியவை அல்ல:
- ஆப்கானிஸ்தான் போரில் நேட்டோ (NATO) படைகளின் பங்களிப்பைத் ட்ரம்ப் விமர்சித்த போது, அங்கு களத்தில் பணியாற்றிய ஹரி அதற்கு எதிராகப் பகிரங்கப் பதில் அளித்திருந்தார்.
- அதேபோல மேகன் மார்க்கிள் குறித்தும் ட்ரம்ப் பலமுறை எதிர்மறையான கருத்துக்களைக் கூறியிருந்தார்.
இருப்பினும், இந்த இடப்பெயர்வுக்கு ட்ரம்ப் காரணியல்ல என்றும், பிள்ளைகளின் பாடசாலைக் கல்வி, மன்னர் சார்ள்ஸுடனான பிணைப்பு மற்றும் பிரித்தானியாவில் அவர்களின் தொண்டு நிறுவனப் பணிகளுமே பிரதான காரணங்கள் எனப் ‘பீப்பிள்’ (People) சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.
🏰 அரச குடும்பத்தில் எந்த மாற்றமும் இல்லை
மன்னர் சார்ள்ஸுக்கு இந்தத் தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு, அவர் தனது பேரக்குழந்தைகளைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைந்த போதிலும், ஹரி மற்றும் மேகன் அரச குடும்பத்தின் உத்தியோகபூர்வப் பொறுப்புகளுக்குத் திரும்ப மாட்டார்கள் என்பதில் மன்னர் உறுதியாக உள்ளார்.
லண்டனுக்கு வெளியே ஒரு தனியார் இல்லத்தில் வசிக்கவுள்ள இவர்கள், தங்களது கலிஃபோர்னியா மற்றும் போர்த்துக்கல் வீடுகளையும் தொடர்ந்து பராமரிப்பர் எனக் கூறப்படுகிறது.
#PrinceHarry #MeghanMarkle #MAGA #DonaldTrump #UKRoyalFamily #KingCharles #USPolitics #TamilKlik

