🚨 உலகக் கிண்ணப் போட்டிகளை தனியார்மயமாக்க ஃபிஃபா முயற்சி? உறுப்பு நாடுகளுக்கு 40 மில்லியன் டொலர் சலுகை அறிவிப்பு – கசிந்தது ரகசியக் கடிதம்! ⚽

Leaked letter reveals Gianni Infantino's £30m offer to FIFA nations over World Cup plans

🏆 ஃபிஃபா தலைவரின் புதிய வர்த்தக திட்டம்: 40 மில்லியன் டொலர் சலுகையால் கொதித்தெழும் ஐரோப்பிய நாடுகள்!⚽

உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளின் வணிக உரிமைகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்து, புதிய வர்த்தக நிறுவனம் ஒன்றை உருவாக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் ஃபிஃபா (FIFA) தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ (Gianni Infantino) இறங்கியுள்ளார்.

இந்தத் திட்டத்திற்கு ஆதரவு அளித்தால், ஃபிஃபாவில் அங்கத்துவம் வகிக்கும் 211 நாடுகளுக்கும் தலா 40 மில்லியன் டொலர் வரை நிதி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து இன்ஃபான்டினோ எழுதிய ரகசியக் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

‘தி டைம்ஸ்’ (The Times) நாளிதழால் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள இந்தக் கடிதம், சர்வதேச கால்பந்து உலகில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

📌 திட்டத்தின் பின்னணி என்ன?

‘FIFA Forward Enterprise’ என்ற பெயரில் 20 பில்லியன் டொலர் (சுமார் 15 பில்லியன் பவுண்ட்ஸ்) மதிப்பில் புதிய வர்த்தக நிறுவனம் ஒன்றை உருவாக்க ஃபிஃபா திட்டமிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை வெளிவாரி தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் பில்லியன் கணக்கிலான டொலர்களைத் திரட்ட முடியும் என்றும், அந்த நிதி மூலம் உலகளாவிய ரீதியில் கால்பந்தாட்ட உட்கட்டமைப்புகளை மேம்படுத்த முடியும் என்றும் இன்ஃபான்டினோ வாதிடுகிறார்.

இந்த முன்மொழிவை ஏற்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க உறுப்பு நாடுகளுக்கு 53 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

💰 உறுப்பு நாடுகளுக்கு என்ன கிடைக்கும்?

புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால், 2027 ஜனவரி 1 முதல் 10 பில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட நிதிப் பொதி உறுப்பு நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என இன்ஃபான்டினோ உறுதியளித்துள்ளார்.

அவ்வாறு ஒப்புக்கொள்ளத் தவறினால், தற்போது நடைமுறையிலுள்ள 2.7 பில்லியன் டொலர் நிதிப் பகிர்வு மட்டுமே தொடரும் என அவர் மறைமுக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

💬 இன்ஃபான்டினோ தனது கடிதத்தில் குறிப்பிட்டதாவது:

“இந்த முன்மொழிவை ஏற்பதா இல்லையா என்பதை நீங்களே தீர்மானிக்கலாம். இதை ஏற்றுக்கொண்டால் 2027 ஜனவரி முதல் 10 பில்லியன் டொலர் நிதி கிடைக்கும். தற்போதைய நிலையையே தக்கவைக்க விரும்பினால் 2.7 பில்லியன் டொலர் நிதி மட்டுமே வழங்கப்படும்.”

“மொத்தத்தில், 2027 ஜனவரி 1 முதல் தொடங்கும் வரவிருக்கும் சுழற்சியில், இந்த முன்மொழிவின் கீழ் ஒவ்வொரு உறுப்பு நாடும் 40 மில்லியன் டொலர் வரை நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும்.”

⚠️ கடும் எதிர்ப்பும் குற்றச்சாட்டுகளும்

ஃபிஃபா தலைவரின் இந்த அதிரடித் திட்டம் குறித்து தங்களுக்கு முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை என இங்கிலாந்து கால்பந்து சம்மேளனம் (The FA) அதிருப்தி வெளியிட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாத இத்தகைய முடிவுகள் குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலையடைவதாக அது தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஐரோப்பிய கால்பந்து சம்மேளனங்களின் ஒன்றியம் (UEFA) இந்த விவகாரத்தில் ஃபிஃபா மீது கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளது.

💬 யுவேஃபா (UEFA) வெளியிட்ட காரசாரமான அறிக்கை:

“கால்பந்தாட்ட நிர்வாக அமைப்புகள் ஒருபோதும் தாண்டக்கூடாத எல்லையை ஃபிஃபா தாண்டுகிறது. கால்பந்தாட்டத்தின் ஆன்மாவும் அதன் நிர்வாகமும் வியாபாரம் செய்வதற்கான பொருட்கள் அல்ல. நம்மில் யாருமே கால்பந்தாட்டத்தின் உரிமையாளர்கள் கிடையாது. அதை விற்பனை செய்வதற்கு ஃபிஃபாவுக்கு எந்த உரிமையும் இல்லை.”

வட மற்றும் மத்திய அமெரிக்க கால்பந்து சம்மேளனமான கான்ஃககாஃபும் (Concacaf) ஊடகங்கள் வாயிலாகவே இத்தகவலை அறிந்ததாகக் கூறி, ஃபிஃபாவின் தன்னிச்சையான செயல்பாட்டைக் கண்டித்துள்ளது.

#FIFA #GianniInfantino #WorldCup #UEFA #FootballNews #SportsNews #USNews #TamilNews #TamilKlik