🛒 ♻️ டெஸ்கோ, அஸ்டா கடைகளில் இனி காசு மழை! — 2027 அக்டோபர் முதல் அமலுக்கு வரும் ‘டிப்பொசிட் ரிட்டன்’ திட்டம்! வெறும் போத்தல்களுக்குப் பணம்!🍾

Households paid to return bottles to Tesco, Asda, Morrisons or Sainsbury's

🇬🇧 🥤”ரசீது தேவையில்லை; சூப்பர் மார்க்கெட்களில் பணம்!” — பிளாஸ்டிக் போத்தல்கள், கான்களுக்கு 20p வழங்கும் பிரித்தானியாவின் புதிய திட்டம்!🪙

    பிரித்தானியாவில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கவும், கழிவுகளைக் குறைக்கவும் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பானக் கான்களைத் (Cans) திருப்பித் தரும் வாடிக்கையாளர்களுக்குப் பணம் வழங்கும் புதிய ‘டிப்பொசிட் ரிடேர்ன் ஸ்கீம்’ (Deposit Return Scheme – DRS) திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

    வரும் 2027 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரவுள்ள இத்திட்டத்தின் கீழ், டெஸ்கோ (Tesco), அஸ்டா (Asda), மொரிசன்ஸ் (Morrisons) மற்றும் செயின்ஸ்பரீஸ் (Sainsbury’s) போன்ற முன்னணி சூப்பர் மார்க்கெட்கள், மளிகைக் கடைகள் மற்றும் பத்திரிகைக் கடைகளில் காலியான போத்தல்களைக் கொடுத்து மக்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

    🚨 🛑 போத்தல் ஒன்றுக்கு 20 பென்ஸ் (20p) பெறலாம்! 🛑 🚨

    இத்திட்டத்தின் மூலம் பானக் கொள்கலன்களுக்கு நிலையான கட்டணமாக 20 பென்ஸ் (20p) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • எப்படிச் செயல்படுகிறது?: வாடிக்கையாளர்கள் கடைகளில் பிளாஸ்டிக் போத்தல்கள் அல்லது கான்களில் பானங்களை வாங்கும்போது 20p வைப்புத் தொகையாகச் (Deposit) சேர்க்கப்படும். பின்னர், காலியான போத்தல்களைக் கடைகளில் உள்ள சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்கும்போது அந்த 20p மீண்டும் வாடிக்கையாளர்களுக்குத் திரும்ப வழங்கப்படும். (இந்த செய்தித் தொகுப்பு தமிழ்க்கிளிக் (TamilKlik) செய்தித் தளத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது…)
    • ரசீது தேவையில்லை: இப்போத்தல்களைத் திரும்பக் கொடுப்பதற்கு எந்தவிதமான ரசீதும் (Receipt) தேவையில்லை. தெருக்களில் கிடக்கும் காலியான போத்தல்களைச் சேகரித்துக் கொடுத்தாலும் கூட இத்தொகையைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ⚠️ 💔 எந்தெந்தப் பொருட்களுக்கு இது பொருந்தும்? ⚠️ 💔

    இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் இத்திட்டம் ஒரே நேரத்தில் தொடங்கப்படவுள்ளது.

    • அனுமதிக்கப்பட்ட அளவுகள்: 150 மில்லி லீட்டர் (150ml) முதல் 3 லீட்டர் (3L) வரையிலான பிளாஸ்டிக் போத்தல்கள் (PET), ஸ்டீல் மற்றும் அலுமினியக் கான்களுக்கு இது பொருந்தும்.
    • கண்ணாடி போத்தல்களுக்கு விலக்கு: பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சித் தரக் காரணங்களால் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் கண்ணாடி போத்தல்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், வேல்ஸ் (Wales) அரசாங்கம் தனது தனிப்பட்ட திட்டத்தின் கீழ் கண்ணாடி போத்தல்களையும் இதில் இணைக்கவுள்ளது.

    ⚖️ 🏛️ கடைகளில் ‘ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்’ வசதி! ⚖️ 🏛️

    பானங்களை விற்பனை செய்யும் அனைத்து சில்லறை வணிகர்களும் இச்சேவையை வழங்க வேண்டும்.

    • பணம் திரும்பப் பெறும் முறைகள்: வாடிக்கையாளாக்கள் போத்தல்களைத் திரும்பத் தரும்போது ரொக்கப் பணமாகவோ (Cash), வவுச்சராகவோ (Voucher) அல்லது வங்கி அட்டை கணக்கிலோ (Card) பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காகக் கடைகளில் ‘ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்கள்’ (Reverse Vending Machines) நிறுவப்படவுள்ளன.
    • சிறிய கடைகளுக்கு விலக்கு: 100 சதுர மீட்டருக்குக் (100m²) குறைவான பரப்பளவு கொண்ட சிறிய கடைகளுக்கு இச்சேவையை வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்கள் விரும்பினால் தன்னார்வமாக இத்திட்டத்தில் இணைய முடியும்.

    செய்தியின் சாராம்சம்

    • 🇬🇧 புதிய திட்டம்: 2027 அக்டோபர் 1 முதல் பிரித்தானியாவில் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கான்களைத் திரும்பத் தந்தால் 20p வழங்கப்படும்.
    • 🛒 கடைகள்: டெஸ்கோ, அஸ்டா போன்ற சூப்பர் மார்க்கெட்களில் ரசீது இன்றியே போத்தல்களைக் கொடுத்துப் பணத்தைப் பெறலாம்.
    • ♻️ சுற்றுச்சூழல் பாதுகாப்பு: ஆண்டுதோறும் வீசப்படும் 14 பில்லியன் பிளாஸ்டிக் போத்தல்களை மறுசுழற்சி செய்ய இத்திட்டம் உதவும்.

    #UKNews #Tesco #Asda #Sainsburys #DepositReturnScheme #RecyclingUK #TamilKlik