✈️🇬🇧 லண்டன் வான்பரப்பில் விபத்திலிருந்து மயிரிழையில் தப்பிய பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம்… லண்டனில் பரபரப்பு! 🚨

British Airways jet 'seconds from disaster' after stalling over London
✈️🇬🇧 ✈️ நடுவானில் ஸ்தம்பித்த பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம்… லண்டனில் இடம்பெற்ற அதிர்ச்சிச் சம்பவம் குறித்து விசாரணை! 🔍 🚨

ஜேர்மனியின் டுசில்டோப் (Dusseldorf) நகரிலிருந்து லண்டன் ஹீத்ரூ (Heathrow) விமான நிலையம் நோக்கிப் பயணித்த பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) விமானம் ஒன்று, லண்டன் வான்பரப்பில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து நொடிப் பொழுதில் பெரும் பேரழிவிலிருந்து தப்பியுள்ளது.

📌 என்ன நடந்தது?

கடந்த ஜூலை 6 ஆம் திகதி ‘BA919’ என்ற இலக்கமுடைய ஏர்பஸ் A320 (Airbus A320) ரக விமானம் லண்டன் கனரி வார்ப் (Canary Wharf) பகுதிக்கு மேல் சுமார் 4,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தின் காற்றழுத்த தரவு அமைப்பில் (Air Data Systems) திடீரெனக் கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக விமானத்தின் வேகம் குறைந்து, நடுவானில் அது இயக்கம் ஸ்தம்பிக்கும் (Stall) அபாயகரமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

⚠️ விமானியின் சமயோசித நடவடிக்கை

விமானத்தில் ஏற்பட்ட கோளாறைச் சரிசெய்ய உதவி விமானி மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தலைமை விமானி (Captain) உடனடியாகத் தலையிட்டு விமானத்தின் கட்டுப்பாட்டைத் தனது கைக்குக் கொண்டுவந்தார்.

பூமிக்கு மிகவும் அருகே, இவ்வளவு குறைந்த உயரத்தில் இவ்வாறானதொரு ஆபத்தான சூழ்நிலையிலிருந்து விமானத்தைக் மீட்டு பாதுகாப்பாக இறக்குவது மிகவும் கடினமானது என விமானப் போக்குவரத்து நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

📝 “மிகவும் தீவிரமான சம்பவம்”

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர், “பிரித்தானிய வான்பரப்பில் சமீபத்திய ஆண்டுகளில் இடம்பெற்ற மிக மோசமான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்று. தலைமை விமானி ஒருவர் நேரடியாகக் குறுக்கிட்டு விமானத்தின் கட்டுப்பாட்டை பலவந்தமாகக் கையில் எடுப்பது மிகவும் அரிதான ஒரு விடயமாகும்,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துத் தவிர்க்கப்பட்ட சம்பவதைத் தொடர்ந்து, அதில் பணியாற்றிய தலைமை விமானி மன அழுத்தம் காரணமாக விடுப்பில் (Stress Leave) சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

🔍 அதிகாரப்பூர்வ விசாரணை ஆரம்பம்

இச்சம்பவம் தொடர்பில் பிரித்தானிய வான் விபத்துகள் விசாரணைப் பிரிவு (Air Accidents Investigation Branch – AAIB) முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது குறித்துப் கருத்து வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர், “நாங்கள் AAIB அமைப்பின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். சட்டப்பூர்வக் காரணங்களால் இந்த நிலையில் மேலதிக கருத்துக்களை வெளியிட முடியாது,” எனத் தெரிவித்துள்ளார்.

#BreakingNews #London #BritishAirways #HeathrowAirport #AviationNews #UKNews #AirAccidentInvestigation #TamilKlik