பிரித்தானியக் குடியுரிமையைப் பெற முண்டியடிக்கும் புலம்பெயர்ந்தோர்! உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூதின் அதிரடித் திட்டத்தால் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பு! 🇬🇧🔥
பிரித்தானியாவில் (UK) வாழும் புலம்பெயர் மக்கள் மத்தியில் தற்போது கடுமையானதொரு போட்டி ஆரம்பமாகியுள்ளது! தொழிற்கட்சி (Labour Party) அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய கடுமையான குடியுரிமைக் கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக்கொள்வதற்கு முன்னர், எப்படியாவது பிரித்தானியக் குடியுரிமையைப் (British Citizenship) பெற்றுவிட வேண்டும் என லட்சக்கணக்கான மக்கள் உள்துறை அமைச்சை (Home Office) நோக்கி படையெடுத்து வருகின்றனர். 🏃♂️💨
வரலாறு காணாத சாதனைப் பதிவு! 📈அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கடந்த மார்ச் மாதத்துடனான ஓராண்டு காலப்பகுதியில் மாத்திரம், முன்னெப்போதும் இல்லாதவாறு 312,000 க்கும் அதிகமானோர் பிரித்தானியக் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர்! இது எட்டு ஆண்டுகளுக்கு முந்தைய எண்ணிக்கையை விட இரண்டு மடங்காகும். அத்துடன், நிரந்தர வதிவிட அனுமதி எனப்படும் ‘இன்டெஃபினற் லீவ் ரு ரிமெய்ன்’ (ILR) கோரி, கடந்த இரண்டு ஆண்டுகளில் 331,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூதின் பாரிய ‘செக்’! 🛑
தற்போதுள்ள விதிகளின்படி, ஒருவர் 5 வருடங்கள் பிரித்தானியாவில் தங்கியிருந்து, குறிப்பிட்ட சில பரீட்சைகளில் சித்தியடைந்தால் நிரந்தர வதிவிட உரிமைக்கு (ILR) விண்ணப்பிக்க முடியும். ஆனால், பிரித்தானியாவின் புதிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) இந்த தகுதிக் காலத்தை 10 வருடங்களாக இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளார்!
அதிர்ச்சித் தகவல் என்னவென்றால், ஏற்கனவே பிரித்தானியாவுக்குள் வந்தவர்களுக்கும் பின்னோக்கிய விளைவுடையதாக (Retrospectively) இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கும், பொதுச் சேவைகளில் ஈடுபடுபவர்களுக்கும் மாத்திரமே இதில் விதிவிலக்கு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.
அரசாங்கத்திற்குள்ளேயே வெடித்துள்ள மோதல்! 💥
இந்த புதிய சட்ட வரைவு, தொழிற்கட்சிக்குள்ளேயே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. முன்னாள் பிரதிப் பிரதமரான அஞ்செலா ரெய்னர் (Angela Rayner) உட்பட சுமார் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை “பிரித்தானியப் பண்புகளுக்கு முரணானது” (Un-British) என்றும், மக்கள் வைத்த நம்பிக்கையை உடைக்கும் செயல் என்றும் அஞ்செலா ரெய்னர் சாடியுள்ளார்.
யார் யார் அதிகம் விண்ணப்பிக்கிறார்கள்? 🌍
இந்தக் குடியுரிமை வேட்டையில் இந்திய நாட்டவர்களே முதலிடத்தில் உள்ளனர் (31,000 க்கும் அதிகமான விண்ணப்பங்கள்). இவர்களைத் தொடர்ந்து பாகிஸ்தான், நைஜீரியா, இத்தாலி மற்றும் போலந்து நாட்டவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். இது தவிர, கன்சர்வேட்டிவ் மற்றும் ரிஃபார்ம் யுகே (Reform UK) போன்ற எதிர்க்கட்சிகள் இன்னும் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரப் போவதாக எச்சரித்துள்ளதால், மாற்று வழியின்றி அனைவரும் அவசரமாக விண்ணப்பித்து வருகின்றனர்.
பிரித்தானியாவின் இந்த புதிய அரசியல் நகர்வுகள், அங்கு வாழும் எமது தமிழ் உறவுகளின் எதிர்காலத்தையும் பாதிக்கலாம் என்பதால், தற்போதைய கள நிலவரம் பெரும் உற்றுநோக்கலுக்கு உள்ளாகியுள்ளது! 👁
#BritishCitizenship #ShabanaMahmood #UKImmigration #LabourGovernment #AngelaRayner #UKMigrationCrisis #SriLankanTamilMedia #LondonNewsTamil #UKTamils

