🏨 ஆடம்பர விடுதிகளில் பாதியளவு கட்டணம் மட்டுமே! – துபாயின் ‘A Dubai Invite’ திட்டம் அறிமுகம்!
✈️ சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கில், துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களைத் துபாய்க்கு அழைப்பதன் மூலம், சுமார் 700 யூரோ (3,000 ஏஇடி – AED) மதிப்புள்ள தள்ளுபடி நன்மைகளைப் பெறக்கூடிய புதிய திட்டமொன்றை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
🏨 துபாய் பொருளாதார மற்றும் சுற்றுலாத் துறையின் (DET) ‘A Dubai Invite’ என்ற இப்புதிய திட்டத்தின் கீழ், ஜூலை 20 முதல் அக்டோபர் 31 வரை துபாய்க்கு வருபவர்களுக்கு விடுதித் தங்குமிடங்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களின் நுழைவுக் கட்டணங்களில் இந்தச் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.
📌 ‘Visit Dubai’ தளத்தில் பதிவு செய்வது எப்படி?
💻 துபாயில் வசிப்பவர்கள் ‘Visit Dubai’ உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாகத் தங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்களை அழைப்பதற்குப் பதிவு செய்ய முடியும்.
🎟️ இதன் மூலம் ‘மெலியா டெசர்ட் பாம்’ (Meliá Desert Palm) போன்ற ஆடம்பர விடுதிகளில் தங்குவதற்கு 45% வரை தள்ளுபடியும், அக்வாவென்ச்சர் (Aquaventure) மற்றும் IMG வேர்ல்ட்ஸ் ஆஃப் அட்வென்ச்சர் (IMG Worlds of Adventure) போன்ற பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு இலவச நுழைவுச் சீட்டுகளும் வழங்கப்படவுள்ளன.
🍽️ அத்துடன் ‘யுஎல்ஏ’ (ULA), ‘ஏசியா ஏசியா’ (Asia Asia) மற்றும் ‘தி 305’ (The 305) போன்ற பிரபல உணவகங்களில் “ஒன்றை வாங்கினால் மற்றொன்று இலவசம்” (2-for-1) போன்ற சலுகைகளும் கிடைக்கவுள்ளன. இதன் மூலம் வெளியூரிலிருந்து வரும் விருந்தினர்களை அழைத்துச் செல்லும்போது செலவு பாதியாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
💬 “துபாயில் வாழும் மக்கள் தங்களுக்குப் பிரியமானவர்களை வரவேர்ப்பதன் மூலம் இந்நகரத்தின் தூதுவர்களாக மாற ஊக்கமளிப்பதே இதன் நோக்கம்,” என துபாய் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
🌍 ஆண்டுதோறும் 19.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் துபாய், உலகின் பணக்காரர்களின் சொர்க்கமாகக் கருதப்படுகிறது. வழக்கமாக கோடை காலத்தில் வெப்பநிலை 50°C வரை உயருவதால் இது சுற்றுலாப் பயணிகள் குறைவாக வருகை தரும் காலப்பகுதியாகும்.
⚠️ மத்திய கிழக்கு போர்ச் சூழலும் துபாய் மீதான தாக்கமும்
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான புதிய மோதல்களில் ஐக்கிய அரபு அமீரகம் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், பெப்ரவரி மாதம் வெடித்த போர் காரணமாகக் வளைகுடா பிராந்தியத்தின் அமைதியான சூழல் பாதிக்கப்பட்டது.
ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் ‘தி பாம்’ (Palm) மற்றும் ‘புர்ஜ் அல் அரப்’ (Burj Al Arab) பகுதிகளிலுள்ள விடுதிகளைப் பாதித்ததால், குளிர்காலத்தில் வந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேறினர்.
கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்தத்திற்குப் பின் சில சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கிய போதிலும், விடுதிகள் பெரும்பாலும் உள்ளூர் வாடிக்கையாளர்களையே நம்பியிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
💰 பொருளாதார நிவாரணத் தொகுப்பு மற்றும் பயணக் காப்பீடு
🏛️ போர் மற்றும் ஹோமுஸ் நீரிணை (Strait of Hormuz) முடக்கம் காரணமாகப் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு உதவும் வகையில், துபாய் அரசு மே மாதம் 400 மில்லியன் டொலர் (€350 மில்லியன்) மதிப்புள்ள பொருளாதார நிவாரணத் தொகுப்பை அறிவித்தது.
நகராட்சி சேவைக் கட்டண விலக்குகள், சுங்க மீறல்களுக்கான அபராதக் குறைப்பு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அனுமதி கட்டணக் குறைப்பு ஆகியவை இதில் அடங்கும். இதற்கு முன்னர் மார்ச் மாத இறுதியில் 270 மில்லியன் டொலர் (€236 மில்லியன்) மதிப்பிலான முதலாவது நிவாரணத் தொகுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
✈️ இதனிடையே, சுற்றுலாப் பயணிகளை மீண்டும் ஈர்ப்பதற்காக ‘எமிரேட்ஸ்’ (Emirates) விமான நிறுவனம் விசேட பயணக் காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
🇬🇧 பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாயம் மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) துபாய்க்குச் செல்லும் பயணிகளுக்கு தற்போது எந்தவிதப் பயணக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. இருப்பினும், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தமது பயண ஆலோசனையைப் புதுப்பித்து, துபாய்க்கான ‘பயணத் தேவையை மறுபரிசீலனை செய்யுமாறு’ தங்களது குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.
#BreakingNews #Dubai #UAE #DubaiTourism #TravelDeals #Emirates #MiddleEast #DubaiInvite #TamilKlik

