🇸🇦🇮🇷 சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்? எச்சரிக்கும் மூத்த அதிகாரி!⚠️
ஈரானுடனான போரில் அமெரிக்காவின் அதிநவீன நீண்டதூர ஏவுகணைகளின் கையிருப்பு முடிவடையும் தருவாயில் உள்ளதாக வெளியான செய்திகளை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.இவ்வாறான ரகசியத் தகவல்களை ஊடகங்களுக்குக் கசியவிட்ட நபர்கள் “துரோகிகள்” எனக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
தமது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிடம் பெருமளவிலான ஆயுதக் கையிருப்பு உள்ளதாகவும், தேவையான வெடிமருந்துகள் தொடர்ந்து உற்பத்திய செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
📌 தகவல் கசிவும் அதிபரின் கோபமும்
அமெரிக்க இராணுவத்தின் ‘ஆர்மி டாக்டிகல் ஏவுகணைத் தொகுதி’ (ATACMS) மற்றும் ‘பிரிசிஷன் ஸ்டிரைக் ஏவுகணைகள்’ (PrSM) ஆகியன ஈரானுக்கு எதிரான போரில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுவிட்டதாகச் சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தத் தகவல்கள் தொடர்பில் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உடன் டொனால்ட் ட்ரம்ப் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டதையும் வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.இத்தகைய செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், பாதுகாப்புச் செயலரின் செயல்பாட்டில் அதிபர் திருப்தியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🌊 ஹோர்முஸ் நீரிணை மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தை
அதேவேளை, மத்திய கிழக்கின் முக்கிய கடல் பாதையான ஹோர்முஸ் நீரிணை தற்சமயம் “ஓரளவு திறந்த நிலையில்” இருப்பதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.இந்தச் சூழலில் ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஓமான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பது தொடர்பான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெஹ்ரான் தரப்பு அறிவித்துள்ளது.
⚠️ சவூதி அரேபியாவுக்கு அச்சுறுத்தல்
இதனிடையே, சவூதி அரேபியாவின் முக்கிய பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு மையங்களைக் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என மூத்த சவூதி அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். ஈராக்கிய ஆயுதக் குழுக்கள் மற்றும் யேமனின் ஹூதி அமைப்பினர் இணைந்து இந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் எனக் கூறப்படுகிறது.
ஈரானின் புரட்சிகர காவல் படையின் (IRGC) மேற்பார்வையில் இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்படுவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் தூதரக முயற்சிகளை சீர்குலைக்கும் நோக்கில் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
#BreakingNews #USNews #IranWar #DonaldTrump #SaudiArabia #StraitOfHormuz #MiddleEastCrisis #WorldNews #TamilKlik

