🔍 🇮🇷”ஈரானிடம் அணுஆயுதம் இருக்கக்கூடாது”… அமெரிக்கா – இஸ்ரேல் தலைவர்கள் எடுத்த முக்கிய முடிவு! ⚛️🇮🇱 🇺🇸
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் விவகாரத்தில் எடுக்கும் முடிவுகளில் தான் எந்தவிதமான அழுத்தத்தையும் அல்லது செல்வாக்கையும் செலுத்தவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து, புதன்கிழமை (ஜூலை 29) ஏபிசி நியூஸ் (ABC News) சேவலுக்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
📌 ஈரான் விவகாரத்தில் 3 வழிகள்
ஈரான் போரைப் பொறுத்தவரை அமெரிக்க அதிபருக்கு முன்னால் மூன்று முக்கிய வழிகள் இருப்பதாக நெதன்யாகு சுட்டிக்காட்டினார்.
ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது, பொருளாதாரத் தடைகள் மற்றும் தடங்கல் நடவடிக்கைகள் மூலம் தொடர்ச்சியான அழுத்தத்தைப் பேணுவது, அல்லது இராணுவ நடவடிக்கையை முன்னெடுப்பது ஆகியவையே அந்த மூன்று வழிகளாகும் என அவர் விவரித்தார்.
⚠️ “முடிவு ட்ரம்பினுடையது”
ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடங்குமாறு தான் ட்ரம்பை வற்புறுத்தியதாக வெளிவந்த செய்திகளை இஸ்ரேல் பிரதமர் முற்றாக மறுத்துள்ளார்.
“அது முற்றிலும் அவருடைய சொந்த முடிவு,” எனக் குறிப்பிட்ட நெதன்யாகு, தாங்கள் இருவரும் இந்த மூன்று சாத்தியக்கூறுகள் குறித்தும் திறந்த மனதுடன் விரிவாகக் கலந்துரையாடியதாகக் கூறினார்.
🎯 பொதுவான இலக்கு
அதேவேளை, ஈரான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அணுஆயுதத்தைப் பெற்றுக்கொள்வதைத் தடுப்பதே இரு நாடுகளின் முதன்மை இலக்கு என்றும் அவர் வலியுறுத்தினார்.
“ஈரான் அணுஆயுதம் ஏந்திய நாடாக மாறுவதைத் தடுப்பதே எங்கள் இருவரினதும் பொதுவான நோக்கமாகும்,” என நெதன்யாகு மேலும் தெரிவித்தார்.
#MiddleEast #Iran #Israel #BenjaminNetanyahu #DonaldTrump #USNews #WorldNews #TamilKlik

