அவசரகால நிலைப் பிரகடனம்: கரிபியன் பிராந்தியத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியப் பிரஜைகளுக்குக் கடும் எச்சரிக்கை!⚠🏝

Caribbean travel warning for Brits after 'state of emergency' declared
கரிபியன் பிராந்தியத்தின் பிரதான நாடான திரினிடாட் மற்றும் ருபாகோவில் (Trinidad and Tobago) ஏற்பட்டுள்ள கடுமையான குற்றச்செயல்கள் மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியப் பிரஜைகளுக்குப் பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சு (FCDO) அவசரப் பயண எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. ✈️🚨

இவ்வருடம் மார்ச் மாதம் 3ஆம் திகதி திரினிடாட் மற்றும் ருபாகோ அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த அவசரகால நிலை தற்போதும் தொடர்கின்றது. பிராந்தியத்தில் நிலவும் அச்சுறுத்தலான சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டே பிரித்தானிய அரசாங்கம் தனது பயண ஆலோசனைகளைத் தற்பொழுது இற்றைப்படுத்தியுள்ளது.

🛑 பொலிஸாருக்குக் கூடுதல் அதிகாரங்கள்!

இந்த அவசரகால நிலைமையின் கீழ், எவரையும் சோதனையிடுவதற்கும், கைது செய்வதற்கும் மற்றும் தடுப்புக்காவலில் வைப்பதற்கும் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினருக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், தற்போதைக்கு ஊரடங்குச் சட்டமோ அல்லது பொதுமக்களின் நடமாட்டத்திற்கான தடைகளோ விதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியப் பிரஜைகள் அங்கு செல்வதனை முழுமையாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படாத போதிலும், தற்போதைய சூழ்நிலையில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

⚠️ சுற்றுலாப் பயணிகள் பேண வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்:

திரினிடாட் மற்றும் ருபாகோவில் அண்மைக்காலமாகத் பயங்கரவாதத் தாக்குதல்கள் எதுவும் இடம்பெறாத போதிலும், வெளிநாட்டவர்கள் நடமாடும் பகுதிகளில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது எனப் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பின்வரும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்:

  • பொது இடங்களில் நடமாடும் போது காதொலிகளைப் (Headphones) பயன்படுத்துவதைத் தவிர்த்தல். 🎧
  • இரவு வேளைகளிலோ அல்லது போதிய வெளிச்சமில்லாத பகுதிகளிலோ தனியாகப் பயணிப்பதைத் தவிர்த்தல். 🌙
  • பெருந்தொகை பணம் மற்றும் பெறுமதியான நகைகளைப் பாதுகாப்பான இடங்களில் வைத்திருத்தல்.
  • ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்களில் பணம் பெறும்போது அல்லது நாணய மாற்று நிலையங்களைப் பயன்படுத்தும்போது விழிப்புடன் இருத்தல். 💳
  • சமூக ஊடக வலையமைப்புகள் தற்பொழுது குற்றவாளிகளால் கண்காணிக்கப்படுவததால், தங்களது இருப்பிடம் குறித்த விபரங்களை இணையத்தில் பதிவிடுவதில் அவதானம் செலுத்துதல்.

📍 ஆபத்தான பிராந்தியங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன!

தலைநகரான போர்ட் ஒஃப் ஸ்பெயின் (Port of Spain) நகரின் மையப்பகுதி, கரினேஜ் (Carenage), சீ லொட்ஸ் (Sea Lots), பெல்மொன்ற் (Belmont), லவண்டில் (Laventille), மொர்வான்ற் (Morvant), பீத்தம் (Beetham), பரட்டாரியா (Barataria), கொகொரைற் (Cocorite) மற்றும் குவீன்ஸ் பார்க் சவன்னா (Queens Park Savannah) ஆகிய பகுதிகளில் வன்முறைக் கும்பல்களின் நடமாட்டமும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணத்திற்காக ஆட்கடத்தல், பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை போன்ற கொடூரக் குற்றச்செயல்களில் இக்கும்பல்கள் ஈடுபட்டு வருவதனால், இப்பகுதிகளுக்குப் பயணிப்போர் அதியுச்ச பாதுகாப்புடன் இருக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 🛡️🧳

#tamilklik #tamil #tamilnews #caribbean #trinidadandtobago #travelwarning #uktourists #fcdo #stateofemergency #portofspain #travelsafety #britishtravelers #caribbeantravel #breakingnews #globalnews #crimeupdates #securityalert #tourism #ukforeignoffice #worldnews #travelscams #safetyfirst #traveladvice #gangviolence #lankanews #srilankantamil #trendingnews #hotnews #newstoday #worldcrisis