⚠️ 🇮🇪 Stena Line & Irish Ferries அறிவிப்பு! — அயர்லாந்துப் பயணங்களுக்கு இனி சாரதி அனுமதிப்பத்திரம் (Driving Licence) செல்லுபடியாகாது!
இதுவரை சாரதி அனுமதிப்பத்திரம் (Driving Licence) போன்ற படத்துடன் கூடிய வேறு அடையாள அட்டைகளைக் காண்பித்துக்கூடப் பயணிக்க முடிந்த நிலையில், இனி செல்லுபடியாகும் கடவுச்சீட்டை (Valid Passport) காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Stena Line மற்றும் Irish Ferries ஆகிய முக்கிய படகுச் சேவை நிறுவனங்கள், பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் படையின் (UK Border Force) புதிய தரவுப் பாதுகாப்பு விதிகளுக்கு அமைவாக இம்மாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
💡 🚢 எந்தெந்தப் பாதைச் சேவைகளுக்குப் பொருந்தும்? ⚠️ 🏛️
- Irish Ferries: டப்ளின் (Dublin) – ஹோலிஹெட் (Holyhead) மற்றும் ரோஸ்லேர் (Rosslare) – பெம்புரூக் (Pembroke) ஆகிய இரு வழிப் பாதைகளுக்கும் பொருந்தும்.
- Stena Line: ஹோலிஹெட் – டப்ளின் மற்றும் ஃபிஷ்கார்ட் (Fishguard) – ரோஸ்லேர் பாதைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் வயது அல்லது குடியுரிமை வேறுபாடின்றி கடவுச்சீட்டு கட்டாயமாகும்.
- விலக்கு அளிக்கப்படும் பகுதிகள்: பெல்ஃபாஸ்ட் (Belfast), லிவர்பூல் (Liverpool), கேன்ரியன் (Cairnryan) அல்லது ஹேஷாம் (Heysham) ஆகிய இடங்களிலிருந்து வட அயர்லாந்திற்குப் பயணிக்கும் பாதைகளில் எந்த மாற்றமும் இல்லை.
🚨 ⚠️️ Common Travel Area உடன்படிக்கை மற்றும் உள்துறை அமைச்சு விளக்கம் 📜 📞
பிரித்தானியா மற்றும் அயர்லாந்து குடிமக்களுக்கு இடையே நூற்றாண்டு பழமையான Common Travel Area (CTA) உடன்படிக்கை இருப்பதால், சட்டபூர்வமாக கடவுச்சீட்டு தேவையில்லை என்ற போதிலும், படகுச் சேவை நிறுவனங்கள் பயணிகள் தரவுகளின் துல்லியத்தை உறுதிப்படுத்தவே இக்கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளன. (இந்த செய்தித் தொகுப்பு தமிழ்க்கிளிக் (TamilKlik) செய்தித் தளத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது…)
- பயணக் காப்பீடு எச்சரிக்கை: கடவுச்சீட்டு செல்லுபடி காலம் முடிந்ததால் பயணம் தடைபட்டால், பயணக் காப்பீட்டு (Travel Insurance) நிறுவனங்கள் அதற்குரிய இழப்பீட்டை வழங்க மாட்டா.
- அவசரக் கடவுச்சீட்டு: ஒரே நாளில் அவசரக் கடவுச்சீட்டு (Emergency Passport) பெற £240 வரை செலவாகும் என்பதுடன், சிறுவர்களுக்கு ஒரே நாளில் அவசரக் கடவுச்சீட்டு சேவை கிடைக்காது.
📌 செய்தியின் சாராம்சம் 📜 📌
- 🚢 கட்டாயக் கடவுச்சீட்டு: அயர்லாந்து – பிரித்தானியப் படகுப் பயணங்களுக்குச் சாரதி அனுமதிப்பத்திரம் இனி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- 🛂 எல்லைப் பாதுகாப்பு: பயணிகள் தகவல்களைத் துல்லியமாகச் சேகரிக்க Border Force வழிகாட்டல்.
- ⚓ வட அயர்லாந்துப் பயணங்கள்: பிரித்தானியாவிற்கும் வட அயர்லாந்திற்கும் இடையிலான பயண விதிகளில் மாற்றம் இல்லை.
#UKBorderForce #UKPassportRules #IrishFerries #StenaLine #UKNews #UKTamilNews #TamilKlik #CommonTravelArea

