🇬🇧 🇪🇺 யுரோஸ்டார் (Eurostar) தனிஆதிக்கத்திற்குப் பலத்த அடி! – ஐரோப்பாவுக்கான புகையிரத சேவையைத் தொடங்கவுள்ள வேர்ஜின் ட்ரெயின்ஸ் (Virgin Trains)! 🚆

Virgin Trains a step closer to running services to Europe in blow to Eurostar
🇬🇧 💷 £700 மில்லியன் பவுண்ட்ஸ் முதலீடு! – ஐரோப்பிய ரயில் திட்டத்தின் மூலம் பிரித்தானியாவில் 400 புதிய வேலைவாய்ப்புகள்! 💼🚆

லண்டனில் இருந்து பரிஸ் (Paris), பிரஸல்ஸ் (Brussels) மற்றும் அமுஸ்டடாம் (Amsterdam) நகரங்களுக்கு சர்வதேச புகையிரத சேவைகளைத் தொடங்குவதற்காக வேர்ஜின் ட்ரெயின்ஸ் (Virgin Trains) நிறுவனத்திற்கு பிரித்தானிய புகையிரத ஒழுங்குமுறை ஆணையமான ORR (Office of Rail and Road) பாதை அணுகல் (Track Access) அனுமதியை வழங்கியுள்ளது.

இதன் மூலம் ஆங்கிலக் கடற்பரப்புச் சுரங்கப் பாதை (Channel Tunnel) வழியிலான பிரயாணத்தில் கடந்த 30 ஆண்டுகளாக யுரோஸ்டார் (Eurostar) நிறுவனம் செலுத்தி வந்த தனிஆதிக்கமும் ஏகபோகமும் (Monopoly) முடிவுக்கு வரவுள்ளது.

ரிச்சர்ட் பிரான்சனின் (Richard Branson) வேர்ஜின் குழுமத்திற்குச் சொந்தமான இந்நிறுவனம், லண்டன் சென்ட் பன்கிராஸ் (St Pancras) மற்றும் ஆங்கிலக் கடற்பரப்புச் சுரங்கப் பாதைக்கு இடைப்பட்ட ‘ஹை ஸ்பீட் 1’ (HS1) பாதையில் நாளொன்றுக்கு 20 இருவழிப் பயணங்களை (Daily Return Services) இயக்குவதற்கு அனுமதி பெற்றுள்ளது. இக் ஒப்பந்தம் 2030 ஒக்டோபர் 1 முதல் 2040 டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதிக்கு செல்லுபடியாகும்.

🚉 யுரோஸ்டாரின் பின்னடைவும் வேர்ஜின் நிறுவனத்தின் திட்டமும்!

1994 ஆம் ஆண்டு ஆங்கிலக் கடற்பரப்புச் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது முதல் பயணிகள் புகையிரத சேவையில் யுரோஸ்டார் நிறுவனம் தனித்து இயங்கி வந்தது. எனினும், அதிக கட்டணம் மற்றும் ஆஷ்போர்ட் (Ashford), எப்ஸ்ப்ளீட் (Ebbsfleet) போன்ற புகையிரத நிலையங்களில் சேவைகளை நிறுத்தியமைக்காக அந்நிறுவனம் விமர்சனங்களைச் சந்தித்திருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்த ரிச்சர்ட் பிரான்சன், “30 ஆண்டுகால இந்த ஏகபோகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, ஆங்கிலக் கடற்பரப்புச் பாதையில் வேர்ஜின் சேவையின் சிறப்பை வழங்குவதற்கான நேரம் இது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வேர்ஜின் ட்ரெயின்ஸ் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு: இத் திட்டத்திற்காக £700 மில்லியன் பவுண்ஸ் முதலீடு செய்யப்படவுள்ளதுடன், பிரித்தானியாவில் சுமார் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • பரிபாலன மையம்: புகையிரதங்களைப் பராமரிப்பதற்கும் நிறுத்துவதற்கும் வசதியாக, கிழக்கு லண்டனில் உள்ள யுரோஸ்டாரின் டெம்பிள் மில்ஸ் (Temple Mills) பராமரிப்பு மையத்தைப் பகிர்ந்துகொள்ள கடந்த ஒக்டோபரில் வேர்ஜினுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
  • சேவை இலக்குகள்: லண்டன் சென்ட் பன்கிராஸ் நிலையத்தில் இருந்து பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாட்டின் முக்கிய தலைநகரங்களுக்குச் சேவைகள் இயக்கப்படும்.

🇪🇺 அடுத்தகட்ட சவால்களும் ஒப்புதல்களும்!

ORR இன் தற்போதைய முடிவு ஒரு முக்கியமான அடுத்தகட்ட நகர்வு என்ற போதிலும், 2030 இல் சேவைகளைத் தொடங்குவதற்கு முன் வேர்ஜின் நிறுவனம் மேலும் பல நடைமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது:

  • ஐரோப்பிய அனுமதி: ஆங்கிலக் கடற்பரப்புச் சுரங்கப் பாதை (Channel Tunnel) மற்றும் பிரதான ஐரோப்பிய நாடுகளின் புகையிரத நெட்வொர்க்குகளுக்கான அணுகல் உரிமைகளைப் பெற வேண்டும்.
  • பாதுகாப்புச் சான்றிதழ்கள்: ORR மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உரிய ஒழுங்குமுறை அமைப்புகளிடம் இருந்து பாதுகாப்பு அனுமதிச் சான்றிதழ்களைப் பெற வேண்டும்.

அதேவேளை, லண்டனில் இருந்து பேர்லின் (Berlin) வரை நேரடி புகையிரதங்களை இயக்குவது தொடர்பில் பிரித்தானிய – ஜேர்மனிய கூட்டுப் பணிக்குழு பரிசீலித்து வருவதும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான புகையிரதப் பிரயாணங்களின் தேவை அதிகரித்து வருவதையுமே காட்டுகிறது.

#VirginTrains #Eurostar #InternationalRail #LondonToParis #UKNews #RailTravel #TamilKlik