🇬🇧 🇷🇺 ⚠️ “ரஷ்யா மீதான தாக்குதல்களுக்கு லண்டனே பொறுப்பு!” – எச்சரிக்கை விடுத்துள்ள மொஸ்கோ தூதரகம்! 🚨 💥
உக்ரைன் போரில் முதன்முறையாக பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களைப் (Drones) பயன்படுத்தி ரஷ்ய நிலப்பரப்புகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானியா இதற்கான “விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்” என ரஷ்யா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானியா “போர் அமைதிக்கான விருப்பத்தை போலியாக அறிவித்துக்கொண்டே, உக்ரைன் நெருக்கடியை தீவிரப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது” எனக் குற்றம் சாட்டியுள்ளது.
பிரித்தானிய தயாரிப்பு ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இத் தாக்குதல்களால் ரஷ்யாவிற்கு சுமார் £35 பில்லியன் பவுண்ஸ் மதிப்பிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
🚨 ரஷ்ய தூதரகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ எச்சரிக்கை!
இது தொடர்பாக லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“ரஷ்ய நிலப்பரப்பின் ஆழமான பகுதிகளுக்குள் தாக்குதல் நடத்த உக்ரைன் பிரித்தானிய ட்ரோன்களைப் பயன்படுத்துவது, லண்டன் வேண்டுமென்றே மோதலைத் தீவிரப்படுத்த முயல்வதை உறுதிப்படுத்துகிறது.
உக்ரைனிய நியோ-நாசிகளின் இரத்தவெறி பிடித்த குற்றங்களுக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் பிரித்தானியா உடந்தையாகச் செயல்படுகிறது. லண்டனின் இந்த நடவடிக்கைகளுக்கான விளைவுகளை அது தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ள நேரிடும். உக்ரைனுக்கு வழங்கும் ஆதரவு அதிகரிக்கும் போது, பிரித்தானியா செலுத்த வேண்டிய விலையும் அதிகமாகும்.”
எவ்வாறாயினும், இப் பதிலடித் தாக்குதல்கள் எவ்வாறான வடிவில் இருக்கும் என்பது குறித்து ரஷ்யா விரிவாகக் குறிப்பிடவில்லை. அதேவேளை, தடையை மீறி எண்ணெய் கடத்தும் ரஷ்ய கப்பல்கள் மீதான மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, பிரித்தானியக் கப்பல்களைக் கைப்பற்றப்போவதாக விளாடிமிர் புடின் கடந்த வாரம் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
🎯 ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் பிரித்தானிய ட்ரோன்கள்!
பிரித்தானியாவின் இரண்டு முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி, ரஷ்ய நிலப்பரப்பில் உள்ள எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள், இராணுவ மையங்கள் மற்றும் வைல்ட்பெரீஸ் (Wildberries) விநியோக மையங்கள் மீது உக்ரைன் வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.
- 1,000 மைல்களுக்கு அப்பாற்பட்ட தாக்குதல்: எல்லைக்கு அப்பால் 1,000 மைல்களுக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்குகள் மீது உக்ரைன் நடத்திய இத் தாக்குதல்களால், ரஷ்யாவின் சில பிராந்தியங்களில் எரிபொருள் தட்டுப்பாடும் மின்சாரத் தடையும் ஏற்பட்டுள்ளன.
- பொருளாதாரப் பாதிப்பு: முன்னர் பயன்படுத்தப்பட்ட ஸ்டோர்ம் ஷாடோ (Storm Shadow) ஏவுகணைகளை விடவும், இப் புதிய ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவின் முக்கிய வருவாய் ஆதாரமான எண்ணெய் உற்பத்தியை நேரடியாகப் பாதித்துள்ளதால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிரித்தானிய பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “தாக்குதல்கள் குறித்து மேற்கத்திய நாடுகள் அச்சமடைவதை ரஷ்யா சாதகமாகப் பயன்படுத்தி வந்தது. ஆனால், இந்தத் தாக்குதல்கள் மூலம் பிரித்தானியா இனி அஞ்சப்போவதில்லை என்ற செய்தி ரஷ்யாவிற்கும் நமது நட்பு நாடுகளுக்கும் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
#UKNews #RussiaUkraineWar #VladimirPutin #London #BritishDrones #WorldNews #TamilKlik

