🇮🇷 🚨 அமெரிக்காவுக்கு 6 அதிரடி நிபந்தனைகளை விதித்தது ஈரான்… ஹோர்முஸ் நீரிணையை திறக்க மறுப்பு! 🚢 🇺🇸
அமெரிக்கா தனது இராணுவத் தலையீடுகளை முடிவுக்குக் கொண்டுவந்து, போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது உட்பட 6 முக்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட மாட்டாது என ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் மொஹமட் பாகர் சொல் காதர் அறிவித்துள்ளார்.
🇮🇷 📌 ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரானின் 6 நிபந்தனைகள்
அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ள 6 நிபந்தனைகள் வருமாறு:
- ஈரானை அச்சுறுத்துவதையோ அல்லது அந்நாட்டின் புனிதங்களை அவமதிப்பதையோ அமெரிக்கா முற்றிலும் நிறுத்த வேண்டும்.
- ஈரான் மற்றும் லெபனான், பாலஸ்தீனம், யேமன், ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அதன் நட்புப் படைகளுக்கு எதிரான போரையும் ஆக்கிரமிப்பையும் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
- கடற்படை முற்றுகையை விலக்கிக் கொண்டு, ஈரானைச் சுற்றியுள்ள தமது கடற்படை மற்றும் விமானப் படைகளை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்.
- ஆக்கிரமிப்புப் போர்களால் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டை முழுமையாக வழங்க வேண்டும்.
- ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சட்டவிரோதத் தடைகளை நீக்க வேண்டும்.
- முடக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட ஈரானிய சொத்துக்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்.
⚠️ ‘ஹோர்முஸ் நீரிணை இனி போர்க் கருவி’
அமெரிக்கா தனது போக்கை மாற்றிக் கொள்ளும் வரை ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட மாட்டாது என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, பண்டார் அப்பாஸ் நகரில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஈரானிய புரட்சிகர காவல்படையின் (IRGC) பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹுசைன் மொஹெபி, ஹோர்முஸ் நீரிணை இப்போது வெறும் வர்த்தகப் பாதையாக இல்லாமல் “அதிகார மற்றும் போர்க் கருவியாக” மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
🌊 உலக எண்ணெய் சந்தையில் அழுத்தம்
கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்த சர்வதேச நீர்வழிப் பாதையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இது போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த வழியே பயணிக்கும் கப்பல்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் ஈரானின் திட்டம் குறித்தும் கப்பல் நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.
🇴🇲 🤝 ஓமானுடன் தீவிர பேச்சுவார்த்தை
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் புதிய கப்பல் பாதை குறித்து ஓமான் நாட்டுடன் உடன்பாட்டை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த நீர்வழிப் பாதையை மீண்டும் முழுமையாகத் திறப்பது, அமெரிக்கா இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட ஈரானின் ஏனைய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படுவதிலேயே தங்கியுள்ளது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
#Iran #USA #StraitOfHormuz #MiddleEastConflict #DonaldTrump #IRGC #WorldNews #TamilKlik

