அமெரிக்கா – இஸ்ரேல் படைகளின் தாக்குதல்களுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையைத் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஈரான் தீவிரம்! ⚖️🌍 🚢🛑
மத்திய கிழக்கின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) ஊடாகச் செல்லும் கப்பல்கள் தாக்கப்படமாட்டாது என்றும், இப்பாதை சர்வதேச போக்குவரத்திற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது என்றும் ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா உத்தியோகபூர்வமாகக் கோரியுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் (Tehran) நிலவும் அதிகாரப் போட்டியின் காரணமாக, அங்குள்ள தீவிரப்போக்குடைய சில குழுக்கள் தற்போதைய தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைப்பதற்காகவே அண்மையில் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
“போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது!” – டிரம்ப் அதிரடி! 🇺🇸🔥
மறுபுறம், அண்மைய மோதல்களைத் தொடர்ந்து ஈரானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ள போதிலும், தற்போதைய போர்நிறுத்தம் (Ceasefire) முற்றிலும் முடிவுக்கு வந்துவிட்டது என்பதைத் தான் எவ்வித சந்தேகமுமின்றித் தெளிவுபடுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஈரான் இஸ்லாமியக் குடியரசு எம்மைப் பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு கோரியுள்ளது. நாம் அதற்குச் சம்மதித்துள்ளோம். ஆனால், போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை ஐக்கிய அமெரிக்கா அவர்களுக்குத் தெளிவான வார்த்தைகளில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது!” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஈரானியத் தலைமைத்துவத்தைக் கடுமையாகச் சாடியுள்ள அவர், இந்த ஆட்சியுடன் பேசுவது “நேர விரயம்” என்றும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்கக் கோரிக்கையை நிராகரித்த ஈரான்! 🌍⚓
மறுபுறம், ஹோர்முஸ் நீரிணைக்கான பொது உத்தரவாதங்களை வாஷிங்டன் எதிர்பார்த்துக் காத்திருந்த அதேவேளையில், ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் முதன்மைத் தூதுவர் அமிர் சயீத் இரவானி (Amir Saeid Iravani) இதனை முற்றிலும் நிராகரித்துள்ளார்.
“ஹோர்முஸ் நீரிணைப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் ஈரானுக்கு மட்டுமே உரித்தானது” என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், “வெளித்தரப்பினர் எவராவது இப்பகுதியில் தலையிடவோ அல்லது புதிய அதிகார அமைப்பை உருவாக்கவோ முயற்சித்தால், அது தற்போதைய தற்காலிக உடன்படிக்கையை மீறும் செயலாக அமையும். இது பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பாதித்து, சர்வதேச அளவில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்திய ஈரானின் இந்தக் கடல்வழி ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையாக இருந்து வந்தது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிக உடன்படிக்கையின்படி, ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த இறுதி முடிவு எட்டப்படும் வரை 60 நாட்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டணமற்ற, பாதுகாப்பான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
பொருளாதாரத் தடைகளும் புதிய சட்ட நடவடிக்கைகளும்! 💰📉
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போரின் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து ஏற்கனவே பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
ஈரான் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில், ஈரான் எண்ணெய் விற்பனை செய்வதற்கான அனுமதியை அமெரிக்கா ஏற்கனவே ரத்துச் செய்துள்ள நிலையில், ஈரானியத் துறைமுகங்களை மீண்டும் முற்றுகையிடப் போவதாகவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு (IRGC) நிதி உதவி வழங்கிய குற்றச்சாட்டில், துபாயைத் தளமாகக் கொண்ட வங்கியாளரும் தொழிலதிபருமான அலி அன்சாரிக்கு (Ali Ansari) எதிராக அமெரிக்க நிதி அமைச்சு புதிய தடைகளை விதித்துள்ளது. இவர் ஏற்கனவே பிரித்தானியாவினாலும் தடை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி (Ayatollah Ali Khamenei) போரின் முதல் நாளிலேயே கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது அடக்க ஆராதனையின் பின்னர் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அமைதிப் பேச்சுவார்த்தையைக் காப்பாற்ற சர்வதேச மத்தியஸ்தர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் அதேவேளையில், ஈரானை மீண்டும் எதிர்கொள்ளத் தாங்கள் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) எச்சரித்துள்ளார்.
#tamilklik #tamil #tamilnews #straitofhormuz #usiranconflict #donaldtrump #iraniannavy #middleeastcrisis #oilprices #shippingnews #breakingnews #uspolitics #tehran #israelkatz #irgc #aliansari #unnews #worldeconomy #maritimesecurity #ceasefireover #lka #srilanka #tamilmedia #globalnews #trendingnews #worldnews #militaryconflict #diplomacy #geopolitics #gulfnews

