📢 ஈரானின் அதிரடி எச்சரிக்கை: ஹோர்முஸ் நீரிணையில் விதிகளை மீறினால் கடுமையான தாக்குதல்! 🛢️⚠️

Iran warns oil tankers to use approved Hormuz routes or face 'forceful response'
மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்தது பதற்றம்: ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகக் கட்டுப்படுத்த முயலும் ஈரான்! 🛢️

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ‘ஹோர்முஸ்’ (Hormuz) நீரிணையூடாக பயணிக்கும் அனைத்து எண்ணெய் கப்பல்களும் தமது அங்கீகரிக்கப்பட்ட கடல்வழிப் பாதைகளையே பயன்படுத்த வேண்டும் என ஈரான் கூட்டு இராணுவக் கட்டளையகம் எச்சரித்துள்ளது. இதனை மீறினால் “கடுமையான பதிலடிக்கு” முகம்கொடுக்க நேரிடும் என்றும் ஈரான் காரசாரமாகத் தெரிவித்துள்ளது.

ஈரான் யுத்தத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில், பேர்சியன் வளைகுடாவின் குறுகிய நுழைவாயிலான இந்த ‘ஹோர்முஸ்’ நீரிணையே தற்போது பிரதான பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.

🤝 கட்டாரில் பேச்சுவார்த்தை; பஹ்ரைனில் அமெரிக்காவின் கூட்டம்!

கட்டாரில் அமெரிக்க மற்றும் ஈரானிய தூதர்கள் மத்தியஸ்தர்களைச் சந்தித்துப் பேசிய அடுத்த நாளே, ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’ (Khatam al-Anbiya) இராணுவக் கட்டளையகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக ஈரானிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் இந்த திடீர் கோபத்திற்கு அமெரிக்காவின் ஒரு அறிவிப்பே காரணம் எனக் கூறப்படுகிறது. பஹ்ரைனில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளின் அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தின் பின் அறிக்கை வெளியிட்ட அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம், “ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற வர்த்தகப் போக்குவரத்தை உறுதி செய்வதில் உலகத் தலைவர்கள் உறுதியாக உள்ளனர்” எனக் குறிப்பிட்டிருந்தது.

🕊️ மறைந்த தலைவர் காமேனியின் இறுதிச்சடங்கு

கடந்த பெப்ரவரி மாதம் யுத்தத்தின் ஆரம்பகட்டத்தில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்குகள் இந்த வார இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த கருத்து ஈரானை மேலும் சினமடையச் செய்துள்ளது.

ஈரான் இராணுவம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ எச்சரிக்கை:

“ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் இஸ்லாமிய குடியரசின் கடல்சார் நெறிமுறைகளை மீறும் அல்லது எமது பாதையிலிருந்து விலகிச் செல்லும் எந்தவொரு கப்பலுக்கும் எமது ஆயுதப் படைகள் உடனடியாகவும் சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்கும். இது விதிமீறும் கப்பல்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தாக முடியும்.”

மேலும், இந்த நீரிணைக்கு மேல் அமெரிக்க போர் விமானங்கள் தொடர்ந்து பறப்பது பிராந்தியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும், ஈரானின் இறையாண்மையில் அமெரிக்கா தலையிட்டால் அதற்குரிய பதில் நடவடிக்கை மிகத் தீவிரமாக இருக்கும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

💵 கப்பல்களுக்கு கட்டணம் விதிக்க ஈரான் திட்டம்?

அடைவு ஒப்பந்தத்தின்படி 60 நாட்களுக்கு கப்பல்கள் கட்டணமின்றி பயணிக்க அமெரிக்காவும் ஈரானும் சம்மதித்திருந்தன. ஆனால், கப்பல்களின் பாதைகளைத் தாங்களே தீர்மானிப்போம் என்றும், பின்னர் அதற்குக் கட்டணம் வசூலிப்போம் என்றும் தற்பொழுது ஈரான் பிடிவாதம் பிடிக்கிறது. இது தசாப்தங்களாக நிலவிவந்த சர்வதேச கடல்சார் நடைமுறைகளை தலைகீழாக மாற்றுவதாக அமைந்துள்ளது. அமெரிக்காவும் பல அரபு நாடுகளும் இந்தக் கட்டண முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என மறுத்துவிட்டன.

🚢 அச்சுறுத்தலையும் தாண்டி மீண்டெழும் கப்பல் போக்குவரத்து

ஓமான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்பு இணைந்து ஓமான் எல்லைக்கு அருகில் புதிய கடல்வழிப் பாதையொன்றை உருவாக்க முயன்றபோது, கடந்த வார இறுதியில் மத்திய கிழக்கில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனினும், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஹோர்முஸ் நீரிணையூடான கப்பல் போக்குவரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கினது.

‘லொய்ட்ஸ் லிஸ்ட் இன்டெலிஜென்ஸ்’ கடல்சார் ஆய்வு நிறுவனம்’ (Lloyd’s List Intelligence) தரவுகளின்படி, கடந்த வாரம் இரு வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருந்த போதிலும், குறைந்தது 258 கப்பல்கள் இந்த வழியைக் கடந்துள்ளன. அதற்கு முந்தைய வாரம் இந்த எண்ணிக்கை 138 ஆக மட்டுமே இருந்தது. ஜூன் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகு போக்குவரத்து சற்று மந்தமடைந்தாலும், திங்கள் முதல் புதன் கிழமைக்குள் மேலும் 80 கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளதாக ‘வின்ட்வார்ட்’ (Windward) நிறுவனம் தெரிவித்துள்ளது.

“ஈரானின் தாக்குதல்களை கப்பல் நிறுவனங்கள் மறந்துவிட்டதாகவே தோன்றுகிறது” என லொய்ட்ஸ் நிறுவனத்தின் முதன்மை ஆசிரியர் ரிச்சர்ட் மேட் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், யுத்தத்திற்கு முன்னர் நாளொன்றுக்கு 130 கப்பல்கள் பயணித்த இந்நீரிணையில், தற்போதைய போக்குவரத்து வழமையான அளவை விட மிகக் குறைவாகவே உள்ளது.

🔍 ஈரானின் நாடகம் அம்பலம்?

ஈரான் புரட்சிகர காவல் படையின் கட்டளையை மீறியதால் வெளிநாட்டு கப்பல் ஒன்று நீரிணையில் சிக்கிக் கொண்டதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த கப்பலின் வடிவம் மற்றும் அது இருக்கும் இடத்தை ஆராய்ந்த சர்வதேச நிபுணர்கள், அது ஈரானுக்குச் சொந்தமான கப்பல் என்றும், பல மாதங்களாக அங்கேயே கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

🇵🇰 பாகிஸ்தான் வெளியுறவுத்துறை வெளியிட்ட நம்பிக்கை செய்தி!

இத்தனை பதற்றங்களுக்கு மத்தியிலும், கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் “சாதகமான முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் தாஹிர் அன்த்ராபி தெரிவித்துள்ளார். ஈரானின் ஆன்மீகத் தலைவரின் இறுதிச்சடங்குகள் நிறைவடைந்தவுடன், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மிக விரைவில் நடக்கும் என பாகிஸ்தான் நம்புவதாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

#tamilklik #tamil #tamilnews #srilankatamil #middleeastnews #irannews #usnews #hormuzstrait #oilprice #worldnews #breakingnews #tamilmedia #internationalnews #shippingnews #energycrisis #gulfnews #pakistannews #securityalert #globaltrade #politicalnews #tamilsocialmedia #lankanews #navyalert #petroleum #worldpolitics #currentaffairs #middleeastcrisis #maritimenews #stratofhormuz #todaynews