“மலேசியா 370 குட்நைட்!” – மறைவதற்கு முன் MH370 விமானத்திலிருந்து வந்த கடைசிச் செய்தி! 🎙️🔍
கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் பயணித்த மலேசியன் எயர்லைன்ஸ் MH370 விமானம் தடம் தெரியாமல் மாயமாகி 11 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், அதன் மர்மம் இன்னமும் விடைபெறாமல் நீடிக்கின்றது.
2014 ஆம் ஆண்டு புறப்பட்ட போயிங் 777 (Boeing 777) ரக விமானம், மலேசிய வான்பரப்பிலிருந்து விலகி வியட்நாம் வான்பரப்பிற்குள் நுழையத் தயாரானபோது, அதன் முதன்மை விமானி ஜஹாரி அகமட் ஷா (Zaharie Ahmad Shah) கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கிய கடைசிச் செய்தியே அனைவரையும் உலுக்கியுள்ளது.
“குட்நைட் மலேசியா திரீ செவன் சீரோ” (Goodnight Malaysia three seven zero) என்பதே விமானி பேசிய அந்தக் கடைசி 5 வார்த்தைகளாகும். இதன்பின்னர் விமானத்திலிருந்து எவ்விதத் தொடர்புகளும் கிடைக்கப்பெறவில்லை.
🔍 விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் முடக்கப்பட்டனவா?
நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த யுகத்தில், ஒரு பெரிய வணிக விமானம் தடயமின்றி மறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- வியட்நாம் வான்பரப்பிற்குள் நுழைந்த கணமே விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு “இருண்ட நிலைக்கு” (Went dark) மாறியதால், விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளிருந்தே திட்டமிட்டு முடக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
- RADAR, ACARS மற்றும் Inmarsat செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில், இக் கட்டுப்பாட்டு அமைப்புகள் முடங்கிய பின்னரும் விமானம் தென் இந்தியப் பெருங்கடலுக்கு மேல் மேலும் 7 மணித்தியாலங்களுக்கும் அதிகமாகப் பறந்து சென்று கடலுக்குள் மூழ்கியிருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
🌊 ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டும் 3 சாத்தியக்கூறுகள்!
பிரித்தானியாவின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் (University of Liverpool) தன்னாட்சி அமைப்புகள் துறையின் பேராசிரியர் சைமன் மாஸ்கெல் (Simon Maskell) தலைமையிலான ஆய்வுக் குழுவினர், WSPRNET தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட ஆய்வில் 3 முக்கிய சாத்தியக்கூறுகளை முன்வைத்துள்ளனர்:
- கொடூர விபத்து: எதிர்பாராத ஆபத்தான விபத்து ஏற்பட்டு, விமானப் பணியாளர்களால் தொடர்புகொள்ளவோ அல்லது வேறு இடத்தில் தரையிறக்கவோ முடியாமல் போயிருக்கலாம்.
- தற்கொலைத் தாக்குதல் (விமானி உயிருடன் இருந்தபோது): விமானத்தை வீழ்த்தி தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் செயற்பட்ட நபர், விமானம் கீழே இறங்கியபோது உயிருடன் இருந்திருக்கலாம்.
- தற்கொலைத் தாக்குதல் (விமானி உயிரிழந்த நிலையில்): குறித்த நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போதிலும், விமானம் கடலில் விழும்போது அவர் உயிருடன் இல்லாமல் இருந்திருக்கலாம்.
இதேவேளை, விமானி ஜஹாரி அகமட் ஷாவின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ‘பிளைட் சிமுலேட்டரில்’ (Flight Simulator) MH370 மாயமான பாதை போன்றே ஒரு பாதை பதியப்பட்டிருந்தமை இத் தற்கொலைக் கோட்பாட்டிற்கு மேலும் வலு சேர்த்தது. எனினும், அவர் திட்டமிட்டு இதனைச் செய்தார் என்பதற்கான நேரடிச் சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
🚢 மீண்டும் தொடங்கும் பிரம்மாண்டத் தேடுதல் வேட்டை!
கடந்த காலங்களில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தென் இந்தியப் பெருங்கடலின் 120,000 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமான பரப்பளவில் 3 வருடங்களாக நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தன.
தற்போது மலேசிய அரசாங்கம், பிரித்தானியாவின் ‘Ocean Infinity’ தேடுதல் நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் புதிய தேடுதல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. “கண்டுபிடித்தால் மட்டுமே கட்டணம்” (No find, no fee) என்ற அடிப்படையில் இந்தத் தேடுதல் வேட்டை தென் இந்தியப் பெருங்கடலில் தீவிரப்படுத்தப்படவுள்ளது.
#MH370 #AviationHistory #OceanInfinity #ZaharieAhmadShah #MalaysiaAirlines #MissingPlane #TamilKlik

