கடலடி கேபிள்களுக்கு ‘கப்பம்’ கேட்கும் ஈரான்! பின்னணி என்ன?
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக இருக்கும் எண்ணெய் விநியோகத்தை முடக்கும் ‘ஹோமுஸ் நீரிணை’ (Strait of Hormuz), இப்போது டிஜிட்டல் உலகிற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கின்றது! 😱
இந்தக் கடல் பகுதியில் அமைந்துள்ள ஆழ்கடல் அதிவேக இணையக் கேபிள்களை (Submarine Cables) பராமரிப்பதற்கு, வெளிநாட்டு நிறுவனங்கள் தமக்கு “பாதுகாப்புக் கட்டணம்” (Protection Fees) அல்லது கப்பம் செலுத்த வேண்டும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏன் இந்த பதற்றம்? 🤷♂️ உலகளாவிய இணையப் போக்குவரத்தின் 99 சதவீதமான தரவுப் பரிமாற்றங்கள் (Data Transmission) இந்த ஆழ்கடல் கேபிள்கள் மூலமாகவே நடக்கின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) தெரிவிக்கின்றது. இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஐரோப்பாவுடன் இணைக்கும் முக்கிய கேபிள்கள் இந்த ஹோமுஸ் நீரிணை ஊடாகவே செல்கின்றன.
குறிப்பாக, இலங்கையையும் இந்தியாவையும் வளைகுடா நாடுகளுடன் இணைக்கும் ‘பால்கன்’ (Falcon) கேபிள் மற்றும் ‘கல்ஃப் பிரிட்ஜ் இன்டர்நெஷனல்’ (Gulf Bridge International) ஆகிய இரு முக்கிய கேபிள்தொடர்கள் ஈரானின் கடல் எல்லைக்குள்ளேயே அமைந்துள்ளன! 🚨
ஈரானின் திட்டம் என்ன? 🎯 மைக்ரோசொப்ட் (Microsoft), மெற்றா (Meta), கூகுள் (Google), அமேசன் (Amazon) போன்ற உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஈரான் இந்த கட்டண நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் காரணமாக இந்த நிறுவனங்கள் ஈரானுக்குப் பணம் செலுத்த முடியாது என்பதை ஈரான் நன்கறியும்.
இருப்பினும், பணம் தராவிட்டால் கேபிள்களில் ஏற்படும் தொழில்நுட்பப் பழுதுகளைப் பார்க்க ஈரான் அனுமதிக்காது. புவிசார் அரசியல் ஆய்வாளர் மாஷா கொட்கின் (Masha Kotkin) கூறுவது போல், “ஈரானின் நோக்கம் கேபிள்களை வெட்டுவதல்ல, மாறாக அவற்றைப் பழுதுபார்க்கும் கட்டமைப்பைத் தன் பிடிக்குள் வைத்திருப்பதுதான்.”
இதனால் நமக்கு என்ன பாதிப்பு? 📉
- வளைகுடா நாடுகளின் வங்கிச் சேவைகள், பிராந்திய கிளவுட் சேவைகள் (Cloud Services) மற்றும் வர்த்தகத் தளங்கள் அனைத்தும் மில்லிசெக்கன் வேகத்தில் இயங்குபவை.
- பழுதுகள் நீக்கப்படாவிட்டால் இணைய வேகம் நத்தை வேகத்திற்கு குறையும், ஆன்லைன் பணப்பரிமாற்றங்கள் தாமதமாகும் மற்றும் ஈ-கொமேர்ஸ் (E-commerce) நிறுவனங்கள் ஸ்தம்பிக்கும்.
ஏற்கனவே 2025 செப்டம்பர் மாதத்தில் செங்கடலில் (Red Sea) ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கேபிள்கள் சேதமாக்கப்பட்டபோது இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் இணைய வேகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்! ⏳
ஈரான் தனது நாட்டின் மீது எதிர்காலத்தில் யாரும் தாக்குதல் நடத்த துணியாதவாறு, உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தித் தன் பலத்தைக் காட்டவே இந்த வியூகத்தை வகுத்துள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

