⚽🏆🇪🇸 ‘பிரின்சஸ் ஒஃப் அஸ்டூரியாஸ்’ விருதை பறிக்கக் கோரி மனுக்கள்… உலகக் கிண்ண இறுதிப் போட்டி சம்பவத்தால் லியோனல் மெஸ்ஸிக்கு நெருக்கடி! 🇦🇷

Lionel Messi's World Cup final behaviour sparks petition to strip him of prestigious award

⚽🏆 🇦🇷🇪🇸 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பிந்தைய சம்பவம்… லியோனல் மெஸ்ஸியின் விருதுக்கு எழுந்த புதிய சிக்கல்! ⚽ 🇦🇷

2026 உலகக் கிண்ணப் காற்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்குப் பின்னர் ஏற்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, ஆர்ஜென்டீனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட ‘பிரின்சஸ் ஒஃப் அஸ்டூரியாஸ்’ (Princess of Asturias) விருதைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. விளையாட்டு, அறிவியல் மற்றும் சமூக மேம்பாட்டிற்குப் பங்காற்றியவர்களுக்காக ஸ்பெயின் அரச குடும்பத்தால் வழங்கப்படும் இந்த உயரிய கௌரவம், கடந்த ஜூன் மாதம் மெஸ்ஸிக்கு அறிவிக்கப்பட்டது.

📌 விருதுக்கான காரணமும் கிளம்பிய சர்ச்சையும்

களத்தில் மெஸ்ஸியின் வியக்கத்தக்க சாதனைகள், அவரது சமூக நலப்பணிகள், மைதானத்தில் வெளிப்படுத்தும் ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் பணிவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே நடுவர் குழு அவருக்கு இந்த விருதை அறிவித்திருந்தது.

எனினும், கடந்த மாதம் நியூ ஜெர்சியில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனா அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போட்டி நிறைவடைந்ததும் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்களும் தள்ளுமுள்ளுகளும் ஏற்பட்டன.

விளையாட்டுத் தர்ம மீறல் குற்றச்சாட்டு

இந்த மோதல்களில் மெஸ்ஸி நேரடியாக ஈடுபடவில்லை என்ற போதிலும், ஸ்பெயின் அணி கோப்பையைக் கைப்பற்றும் நிகழ்வின் போது மெஸ்ஸியும் அவரது சக வீரர்களும் அந்தப் பக்கமே பார்க்காமல் புறக்கணித்துப் பின்னடவைந்து நின்றனர். இந்தச் செயல் விளையாட்டுத் தர்மத்திற்கும் பரஸ்பர மரியாதைகளுக்கும் எதிரானது எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, மெஸ்ஸிக்கு வழங்கப்படவுள்ள விருதைத் திரும்பப் பெற வலியுறுத்தி பல ஆன்லைன் மனுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மெஸ்ஸியின் இந்த நடவடிக்கை, இந்த உயரிய விருது பிரதிபலிக்கும் உயரிய பண்புகளுக்குப் பொருத்தமானதாக இல்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

📜 மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்

மனு ஒன்றில், “மெஸ்ஸியின் இந்தச் செயல் விளையாட்டுப் பண்புகளுக்கு மாறானதுடன், விளையாட்டுத் துறை ஊக்குவிக்கும் பரஸ்பர மரியாதைக்கும் நேர்மைக்கும் எதிரானது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விருதைத் திரும்பப் பெறுவது விளையாட்டு உலகில் அனைத்து நிலைகளிலும் முன்மாதிரியான நடத்தைப் பேணப்பட வேண்டும் என்பதற்கு வலுவான செய்தியாக அமையும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அல் கோர், டேவிட் ஆட்டன்பரோ, ரஃபேல் நடால் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற சான்றோர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருதின் நம்பகத்தன்மையையும் நேர்மையையும் பாதுகாப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியமானது என மற்றொரு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🏛️ அறக்கட்டளையின் அறிவிப்பு

39 வயதாகும் மெஸ்ஸி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள விழாவில் இந்த விருதைப் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தார். விருதை அறிவித்த ‘பிரின்சஸ் ஒஃப் அஸ்டூரியாஸ்’ அறக்கட்டளை, மெஸ்ஸியின் திறமை மட்டுமன்றி, நலிவடைந்த குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அவர் ஆற்றிவரும் பங்களிப்பையும் பாராட்டியிருந்தது.

அத்துடன், கால்பந்து வரலாற்றில் அதிக பட்டங்களை வென்ற வீரரான மெஸ்ஸி, மைதானத்தில் தனது முன்மாதிரியான நடத்தை மற்றும் பணிவினால் அனைவரது அன்பையும் மரியாதையையும் பெற்றவர் என்றும் அறக்கட்டளை குறிப்பிட்டிருந்தது.

🇪🇸 இறுதிப் போட்டியில் என்ன நடந்தது?

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் மேலதிக நேரத்தில் 1-0 எனத் தோல்வியடைந்ததன் மூலம், மெஸ்ஸியின் சர்வதேசக் கால்பந்து பயணத்தின் இறுதிப் போட்டி ஏமாற்றத்துடன் முடிவடைந்தது. போட்டியின் இடையே ஆர்ஜென்டீனா அணியின் என்ஸோ பெர்னாண்டஸ் சிவப்ப அட்டை பெற்று வெளியேறிய நிலையில், ஸ்பெயின் அணியின் ஃபெரான் டொரெஸ் தீர்க்கமான வெற்றிக் கோலை அடித்தார்.

போட்டியின் பெரும்பகுதியில் ஸ்பெயின் அணியே ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் 68 சதவீதப் பந்துக் கட்டுப்பாட்டைத் தம்வசம் வைத்திருந்ததுடன், 20 முறை கோல் இலக்குகளை நோக்கிப் பந்தை அடித்தனர். அதேவேளை, ஆர்ஜென்டீனா அணி மேலதிக நேரத்தில் பின்னடைவைச் சந்தித்த பின்னரே 3 முறை மட்டுமே கோல் முயற்சிகளை மேற்கொண்டது.

🔍 ஃபிஃபா (FIFA) விசாரணை

போட்டி முடிந்த பின்னர் மைதானத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் போட்டிக்கு பெரும் இழுக்கை ஏற்படுத்தின.

ஆர்ஜென்டீனா அணியின் மத்திய கள வீரர் லியான்ட்ரோ பரீடேஸ், ஸ்பெயின் அணியின் இரு வீரர்களைக் கைகளால் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஃபிஃபா அமைப்பினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

#LionelMessi #WorldCup2026 #Argentina #Spain #PrincessOfAsturiasAward #FootballNews #SportsNews #TamilKlik