🇺🇸 💥வளைகுடாவில் வெடிக்கும் புதிய சர்ச்சை… ரஷ்ய செயற்கைக்கோள்கள் கண்காணித்த அமெரிக்க வான்படைத் தளங்கள்! 🇷🇺
மத்திய கிழக்கில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் தொடர்பான செயற்கைக்கோள் படங்களை (Satellite images) ரஷ்யா, ஈரானுக்கு வழங்கி வருவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) முன்வைத்துள்ள குற்றச்சாட்டு உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டு தொடர்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கருத்து வெளியிட்டுள்ளார்.
📌 புடினிடம் நேரடியாகக் கேட்கவுள்ள டிரம்ப்!
அமெரிக்க இராணுவத் தளங்களைக் குறிவைப்பதற்கு ஈரானுக்கு உதவும் வகையில், ரஷ்ய செயற்கைக்கோள் படங்களை உளவுத் தகவலாக ரஷ்யா வழங்கியதாக ஸெலென்ஸ்கி வெளியிட்ட தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் டிரம்பிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அதிபர் டிரம்ப், “இந்தக் குற்றச்சாட்டு உண்மையானதா என்பதை முதலில் நாங்கள் கண்டறிய வேண்டும். இது குறித்து நான் ரஷ்ய அதிபர் புடினிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்வேன்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்க இராணுவத் தளங்கள் ஏற்கெனவே முழுமையான பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நிலையில் உள்ளதால் இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படப்போவதில்லை என்றும் தெரிவித்த அவர், “வெனிசுவேலாவுக்கு ரஷ்யா பெருமளவிலான இராணுவத் தளவாடங்களை வழங்கி உதவ முயன்றது, ஆனால் அதன் முடிவு என்னவானது? அது பெரிய அளவில் பயனளிக்கவில்லை,” எனக் கிண்டலாகச் சுட்டிக்காட்டினார்.
💬 ஆதாரங்களை வெளியிட்ட உக்ரைன்!
கடந்த ஜூலை 25 அன்று கருத்துத் தெரிவித்திருந்த உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, பாரசீக வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் இராணுவத் தளங்களை ரஷ்ய செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து ஈரானுக்குப் படங்களை அனுப்பி வருவதாகக் குற்றம்சாட்டினார்.
“ஜூலை 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் மட்டும் பஹ்ரைனில் உள்ள இரண்டு, ஜோர்தானில் உள்ள ஒன்று மற்றும் குவைத்தில் உள்ள ஒன்று என நான்கு வான்படைத் தளங்கள் ரஷ்ய செயற்கைக்கோள்களால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்த ஸெலென்ஸ்கி, இது தொடர்பான உளவுத் தகவல்களை சர்வதேச பங்காளிகளுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
⚠️ மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்!
அதேவேளை, ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்டு வந்த இரண்டு வார வான்வழித் தாக்குதல்களை அதிபர் டிரம்ப் இடைநிறுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு தங்களை யாரும் கேட்கவில்லை என்றும் ஹோமுஸ் நீரிணையின் (Strait of Hormuz) முழுமையான கட்டுப்பாடு தங்களிடமே உள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ‘பற்றியொட்‘ (Patriot) ஏவுகணைத் தற்காப்பு அமைப்புகளின் கையிருப்பு குறைந்ததன் காரணமாகவே ஈரானுக்கு எதிரான பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
#DonaldTrump #VolodymyrZelenskyy #Russia #Iran #USNews #WorldNews #MiddleEast #TamilKlik

