🏆 🇦🇷 ஆர்ஜென்டீனா அணிக்கு ஃபிஃபா தலைவரின் பாராட்டு… வெடித்தது புதிய சர்ச்சை!

FIFA president's astonishing letter praising Argentina's 'professionalism' at the World Cup leaked

🏆 🇦🇷 📜 விசாரணை ஒருபுறம்… பாராட்டு மறுபுறம்! கசிந்தது 🇦🇷 ஆர்ஜென்டீனா குறித்த ஃபிஃபா தலைவரின் கடிதம்!

2026 உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் தோல்வியடைந்த பின்னர், 🇦🇷 ஆர்ஜென்டீனா அணி வீரர்களின் ஒழுங்கீனமான நடத்தை குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) தீவிர விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில், அந்த அணியின் ‘தொழில்முறை ஒழுக்கத்தை’ (Professionalism) பாராட்டி ஃபிஃபா தலைவர் ஜியான்னி இன்ஃபாண்டினோ (Gianni Infantino) எழுதிய இரகசியக் கடிதம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

📌 கசிந்த அதிர்ச்சிக் கடிதம்

🇦🇷 ஆர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கிளாடியோ டப்பியாவுக்கு (Claudio Tapia) ஃபிஃபா தலைவர் அனுப்பிய இக்கடிதம் முதலில் ஆர்ஜென்டீன ஊடகங்களில் கசிந்தது. அதனைத் தொடர்ந்து பிரித்தானிய ஊடகமான டெய்லி மெயில் (Daily Mail) இக்கடிதத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது.

ஜூலை 19 ஆம் திகதி நியூயோர்க் நியூஜேர்சி மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் 🇦🇷 ஆர்ஜென்டீனா அணி வெள்ளிப் பதக்கம் வென்றதற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள இன்ஃபாண்டினோ, வீரர்களின் அர்ப்பணிப்பையும் தொழில்முறை ஒழுக்கத்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு இத்தகைய வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பப்படுவது வழக்கமான ஒன்று என்ற போதிலும், களத்தில் மோசமாக நடந்துகொண்ட ஒரு அணியைப் பாராட்டி பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் கேள்விகளை எழுப்பியுள்ளன.

📌 இறுதிப் போட்டியில் நடந்த அசாம்பாவிதங்கள்

இறுதிப் போட்டியில் 🇪🇸 ஸ்பெயின் அணியிடம் கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த பின்னர், 🇦🇷 ஆர்ஜென்டீனா வீரர்கள் நடந்து கொண்ட விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. லூயிஸ் டி லா ஃபுவாண்டே (Luis de la Fuente) தலைமையிலான ஸ்பெயின் அணி கிண்ணத்தை உயர்த்திய போது, 🇦🇷 ஆர்ஜென்டீனா வீரர்கள் அவர்களுக்கு மரியாதை அளிக்காமல் எதிர்த்திசையை நோக்கித் திரும்பி நின்றனர்.

போட்டி நிறைவடைந்ததும் கை கலப்பு ஏற்பட்ட நிலையில், 🇦🇷 ஆர்ஜென்டீனா அணியின் லியான்ட்ரோ பரீடஸ் (Leandro Paredes), ஸ்பெயின் அணியின் எரிக் கார்சியாவைத் (Eric Garcia) தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் நஹுவேல் மொலினா (Nahuel Molina), தியாகோ அல்மாடா (Thiago Almada) மற்றும் உதவிப் பயிற்சியாளர் ரொபேர்ட்டோ அயாலா (Roberto Ayala) ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறி ஃபிஃபா ஒழுக்காற்று விசாரணை நடத்தி வருகின்றது.

📌 தொடரும் சர்ச்சைகளும் ஏமாற்று உத்திகளும்

இறுதிப் போட்டியின் போது, நடுவர் ஸ்லாவ்கோ வின்சிச்சை (Slavko Vincic) ஏமாற்றி, ஸ்பெயின் அணியின் மார்க் குகுரெல்லாவுக்கு (Marc Cucurella) சிவப்பு அட்டை பெற வைக்க லியோனல் மெஸ்சி முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முன்னதாக 🇬🇧 இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும், 🇦🇷 ஆர்ஜென்டீனா வீரர்கள் ‘போக்லாந்து தீவுகள்’ (Falkland Islands) குறித்த சர்ச்சைக்குரிய சுவரொட்டியை ஏந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஜூட் பெலிங்ஹாமிற்கு (Jude Bellingham) எதிராகவும் இத்தகைய உத்திகளைக் கையாண்டதாக பிரித்தானியத் தரப்பில் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

ஒழுக்கக் கட்டுப்பாட்டு மீறல்கள் தொடர்பாகத் தங்களின் சொந்த அமைப்பே விசாரணையை முன்னெடுத்து வரும் நிலையில், ஃபிஃபா தலைவர் 🇦🇷 ஆர்ஜென்டீனா அணியின் “தொழில்முறை ஒழுக்கத்தைப்” பாராட்டியிருப்பது நடுநிலைத் தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

#FIFA #WorldCup2026 #Argentina #GianniInfantino #LionelMessi #Spain #FootballNews #TamilKlik